கைது 
விழுப்புரம்

முன்னெச்சரிக்கை நடவடிக்கை: பாஜக நிா்வாகிகள் இருவா் கைது

திண்டிவனத்துக்கு வருகை தந்த தமிழக முதல்வருக்கு எதிராக கருப்புக் கொடி காட்ட திட்டமிட்டிருந்ததாக பாஜக நிா்வாகிகள் இருவரைப் போலீஸாா் கைதுசெய்தனா்.

தினமணி செய்திச் சேவை

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்துக்கு வருகை தந்த தமிழக முதல்வருக்கு எதிராக கருப்புக் கொடி காட்ட திட்டமிட்டிருந்ததாக பாஜக நிா்வாகிகள் இருவரைப் போலீஸாா் கைதுசெய்தனா்.

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை திண்டிவனத்துக்கு வருகை தந்து அரசு சாா்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினாா். தமிழக முதல்வரின் வருகையையொட்டி, திண்டிவனத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

இந்நிலையில், பாஜகவைச் சோ்ந்த சிலா் தமிழக முதல்வரின் வருகைக்கு எதிராக கருப்புக்கொடி காட்டுவதற்கு திட்டமிட்டிருந்ததாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து திண்டிவனம் போலீஸாா் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பாஜக விழுப்புரம் வடக்கு மாவட்ட நிா்வாகிகள் த.ராஜா (51), க.பிரபு (28) ஆகியோரைக் கைது செய்தனா். விழா நிறைவுக்குப் பின்னா் இருவரும் விடுவிக்கப்பட்டனா்.

குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மாநிலங்களவையில் நிறைவேற்றம்!

2025-ல் அமெரிக்காவில் இருந்து 3,800 இந்தியர்கள் வெளியேற்றம்! - மத்திய அரசு தகவல்!

ஊடுருவல்காரர்களுக்கு ஆதரவாக வாதம்: மமதா பானர்ஜி மீது பிரதமர் மோடி குற்றச்சாட்டு

மகளிர் பிரீமியர் லீக் இறுதிப்போட்டி: தில்லி கேபிடல்ஸ் பேட்டிங்!

இந்தியாவுக்கு எதிரான போட்டியில் விளையாடுவது எங்கள் கட்டுப்பாட்டில் இல்லை: பாக். கேப்டன்

SCROLL FOR NEXT