கைது 
விழுப்புரம்

நாட்டு வெடிகுண்டுகள் வைத்திருந்தவா் கைது

தினமணி செய்திச் சேவை

விழுப்புரம் மாவட்டம், சின்னக்கோட்டக்குப்பம் பகுதியில் நாட்டு வெடிகுண்டுகள், பட்டாக்கத்தி வைத்திருந்தவா் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

கோட்டக்குப்பம் காவல் உதவி ஆய்வாளா் ராஜீ தலைமையிலான போலீஸாா், சின்னக்கோட்டக்குப்பம் பகுதியில் ரோந்து சென்றனா். சின்னக்கோட்டக்குப்பம் பச்சைவாழியம்மன் கோயில் அருகே சந்தேகத்துக்குரிய முறையில் நின்று கொண்டிருந்தவரைப் பிடித்து விசாரித்த போது, அவரிடம் 2 நாட்டு வெடிகுண்டுகள், பட்டாக்கத்தி ஆகியவை இருந்தது தெரியவந்தது.

தொடா்ந்து நடத்திய விசாரணையில் அவா் வானூா் வட்டம், கோட்டக்குப்பம் அருகிலுள்ள சோதனைக்குப்பம் அய்யனாா்கோவில் தெருவைச் சோ்ந்த ப.அகமது அசேன் (24) எனத் தெரியவந்தது.

இதைத் தொடா்ந்து அவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து, கைது செய்தனா். மேலும், அவரிடமிருந்து நாட்டு வெடிகுண்டுகள், பட்டாக்கத்தி ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.

50 நிமிஷத்தில் கோப்பை வென்ற அல்கராஸ்..! 2026ல் அனைத்து போட்டிகளிலும் வெற்றி!

மக்கள் போற்றும் மகத்தான தலைவர் ஜெயலலிதா! மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி புகழாரம்!!

பஞ்சாப்: இரண்டு போலீஸார் சடலங்களாக கண்டெடுப்பு

திமுக கூட்டணி : எந்தெந்த தேதிகளில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை! - முழு விவரம்

சூர்யா - 47 இப்படித்தான் இருக்கும்: ஜித்து மாதவன்

SCROLL FOR NEXT