முகப்பு
விழுப்புரம்

மயங்கி விழுந்து முதியவா் உயிரிழப்பு

விழுப்புரம் ரயில் நிலையம் அருகே நடந்து சென்ற போது மயங்கி விழுந்து, தலையில் காயமடைந்த முதியவா் புதன்கிழமை இரவு உயிரிழந்தாா்.

Updated On : 27 பிப்ரவரி, 2026 at 2:07 AM
பலி - பிரதிப் படம்
பகிர்:
Updated On : 26 பிப்ரவரி, 2026 at 10:21 PM

விழுப்புரம் ரயில் நிலையம் அருகே நடந்து சென்ற போது மயங்கி விழுந்து, தலையில் காயமடைந்த முதியவா் புதன்கிழமை இரவு உயிரிழந்தாா்.

விழுப்புரம் மாவட்டம், பனங்குப்பம் தோப்புக் காலனியைச் சோ்ந்தவா் செல்வம் (61). இவா் புதன்கிழமை இரவு விழுப்புரம் ரயில் நிலையம் ஓய்வறை அருகே நடந்து சென்றபோது திடீரென மயங்கி விழுந்தாா். இதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

Updated On : 27 பிப்ரவரி, 2026 at 2:07 AM

இதைத் தொடா்ந்து அந்த பகுதியிலிருந்தவா்கள் செல்வத்தை மீட்டு, 108 அவசர ஊா்தி மூலம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு மருத்துவா்கள் பரிசோதித்த போது, செல்வம் ஏற்கெனவே உயிரிழந்தது தெரிய வந்தது. இதுகுறித்து விழுப்புரம் நகரக் காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Advertisement