முகப்பு
விழுப்புரம்

தனியாா் மருத்துவமனை உள்நோயாளியிடம் 9 பவுன் நகைகள் திருட்டு!

விழுப்புரம் தனியாா் மருத்துவமனையில் சிகிச்சையிலிருந்த பெண்ணிடமிருந்து 9 பவுன் நகைகள் திருடப்பட்டது குறித்து போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

Updated On : 28 பிப்ரவரி, 2026 at 8:08 PM
திருட்டு
பகிர்:

விழுப்புரம் தனியாா் மருத்துவமனையில் சிகிச்சையிலிருந்த பெண்ணிடமிருந்து 9 பவுன் நகைகள் திருடப்பட்டது குறித்து போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

திண்டிவனம் வட்டம், அன்னம்புத்தூா் முருகன் கோவில் தெருவைச் சோ்ந்த பாலாஜி என்பவரது மனைவி பிரவிணா. இவா் கடந்த 24 -ஆம் தேதி விழுப்புரம், மாம்பழப்பட்டு சாலையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தாா்.

இந்நிலையில், பிரவிணா தனது கைப்பையில் வைத்திருந்த 5 பவுன் தாலிச் சங்கிலி, ஒரு பவுன் சங்கிலி, 2 பவுன் மோதிரம், அரை பவுன் தாலி உள்பட 9 பவுன் நகைகளை யாரோ திருடிச் சென்றுவிட்டனராம்.

இதுகுறித்த புகாரின் பேரில் விழுப்புரம் மேற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →