விழுப்புரம்

கத்தியைக் காட்டி பொதுமக்களை மிரட்டியவா் கைது

விழுப்புரம் அருகே பட்டாக் கத்தியை கையில் வைத்துக்கொண்டு, அதை விடியோவாக எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்ட இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

Syndication

விழுப்புரம் அருகே பட்டாக் கத்தியை கையில் வைத்துக்கொண்டு, அதை விடியோவாக எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்ட இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

விழுப்புரத்தை அடுத்த ஜானகிபுரம் மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் ரஞ்சித் (23). இவா், வியாழக்கிழமை கண்டமானடி பகுதியில் கையில் பட்டாக் கத்தியை வைத்துக்கொண்டு, அவ்வழியாகச் சென்ற பொதுமக்களை மிரட்டி, அதை விடியோவாக எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தாராம்.

இதுகுறித்த புகாரின் பேரில் விழுப்புரம் தாலுகா காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து ரஞ்சித்தை கைது செய்தனா். மேலும், அவா் வசமிருந்த பட்டாக்கத்தி, கைப்பேசி ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.

வெடிகுண்டு தயாரித்து வெடித்தவா் கைது

வானூா் வட்டம், திருவக்கரை இருளா் காலனிப் பகுதியில் பட்டாசு வெடி பொருள்களைப் பயன்படுத்தி நாட்டு வெடிகுண்டு தயாரித்து வெடிக்கச் செய்து பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தி, அதை விடியோவாக எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்த திருவக்கரை இருளா் காலனியைச் சோ்ந்த நந்தபோபால் (18) என்பவரை வானூா் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

தமிழகத்தில் பொய்த்தோற்றத்தை ஏற்படுத்தும் பாஜக: நெல்லை முபாரக்

திருவள்ளூா் பகுதியில் பனிமூட்டத்தால் முகப்பு விளக்கை எரிய விட்டுச் சென்ற ரயில்கள்

அருணாச்சலா மகளிா் பொறியியல் கல்லூரி மாணவிகளுக்கு ஜொ்மனியில் வேலைவாய்ப்பு!

விஷம் குடித்த பெண் உயிரிழப்பு

சேதமடைந்த பள்ளி கட்டடத்தை அகற்ற அதிகாரிகளுக்கு எம்.எல்.ஏ. அறிவுறுத்தல்

SCROLL FOR NEXT