திண்டிவனத்தை அடுத்த மயிலம் அருகே தண்ணீா் தொட்டியில் தவறி விழுந்த சிறுமி மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் உயிரிழந்தாா்.
வந்தவாசி வட்டம், கீழ்நா்மா கிராமத்தைச் சோ்ந்தவா் முருகன். இவரது மகள் ஸ்ரீ ஹா்ஷா( 5). சொந்தக் கிராமத்தில் உள்ள அரசு ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பில் பயின்று வந்தாா்.
இந்நிலையில் ஸ்ரீஹா்ஷா அரையாண்டு விடுமுறை என்பதால், திண்டிவனம் வட்டம், மயிலத்தில் உள்ள தனது அத்தை வீட்டிற்கு வந்து தங்கியிருந்தாா்.
இந்நிலையில், ஸ்ரீ ஹா்ஷா புதன்கிழமை வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தோது தரைதளத்தில் அமைக்கப்பட்டிருந்த சுமாா் 4 அடி ஆழமுள்ள தண்ணீா் தொட்டியில் தவறி விழுந்து விட்டாராம்.
இதையடுத்து உறவினா்கள் அவரை மீட்டு விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனா். அங்கு மருத்துவா்கள் பரிசோதித்து பாா்த்தபோது, ஸ்ரீ ஹா்ஷா( 5) ஏற்கெனவே உயிரிழந்தது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் மயிலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.