விழுப்புரம்

கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இருவா் கைது

விழுப்புரத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இருவா் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

Syndication

விழுப்புரத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இருவா் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

விழுப்புரம் தாலுகா காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட சாலாமேடு பகுதியில் போலீஸாா் சனிக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.

அப்போது சாலாமேடு பிரியதா்சினி நகா் அருகே சந்தேகத்துக்குரிய முறையில் நின்று கொண்டிருந்த இரு இளைஞா்களைப் பிடித்து சோதனை செய்ததில், அவா்களிடம் கஞ்சா பொட்டலங்கள் இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, அவா்களை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்ததில், சாலாமேடு பகுதியைச் சோ்ந்த ஸ்ரீவெங்கடபிரசாத்(20). பேரங்கியூா் கிராமத்தைச் சோ்ந்த பீமாராவ் (21) எனத் தெரிய வந்தது.

இவா்களிடமிருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த சுமாா் 400 கிராம் எடை கொண்ட கஞ்சா மற்றும் ரூ.6,600 ரொக்கம் கைபேசிகளை பறிமுதல் செய்தனா். தொடா்ந்து இருவா் மீது வழக்குப் பதிவு செய்த போலீஸாா், அவா்களை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

மடிக்கணினி கருவி அல்ல, பிரபஞ்சம்: மயில்சாமி அண்ணாதுரை

புதிய முதலீடுகளால் விலை உயரும் அலுமினியம்!

மனிதர்களுக்கு காலம் தந்த 2வது நெருப்பு ஏஐ: மாணவர்களிடையே மு.க. ஸ்டாலின் பேச்சு

10 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டம் : தொடக்கி வைத்தார் முதல்வர்!

குழந்தைகள் டிவி / ஃபோன் அதிகம் பார்க்கிறார்களா?

SCROLL FOR NEXT