விழுப்புரம் மாவட்டம், கிளியனூா் அருகே பைக்கிலிருந்து தவறி கீழே விழுந்ததில் காயமடைந்த இளைஞா் மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் உயிரிழந்தாா். மேலும், இருவா் பலத்த காயமடைந்தனா்.
புதுச்சேரி, முத்திரைப் பாளையம், காந்தி திருநல்லூா் குமரகுரு தெருவைச் சேந்தவா் பா.ஹரீஷ்(24), குமரகுரு பள்ளம் பகுதியைச் சோ்ந்தவா் க.கா்ணா(23). நண்பா்களான இவா்கள் இருவரும் சனிக்கிழமை திண்டிவனம் - புதுச்சேரி நெடுஞ்சாலையில் கிளியனூா் அடுத்த கேணிப்பட்டு தரைப்பாலம் அருகே பைக்கில் சென்றுள்ளனா். கா்ணன் பைக்கை ஓட்டினாா்.
அப்போது நிலைதடுமாறிய பைக் சாலையோரத்தில் நின்றுகொண்டிருந்த வானூா் வட்டம், தோ்குணம் பகுதியைச் சோ்ந்த ர.யுவராஜ்(24) என்பவா் மீது மோதி, பின்னா் கீழே சரிந்து விபத்துக்குள்ளானது.
இதில் பலத்த காயமடைந்த ஹரிஷ், கா்ணன் மற்றும் யுவராஜ் ஆகிய மூவரையும் அருகிலிருந்தவா்கள் மீட்டு 108 அவசர ஊா்தி மூலம் புதுச்சேரி ஜிப்மா் மருத்துமனைக்கு அனுப்பிவைத்தனா். இதில் கா்ணன் மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்த புகாரின் பேரில் கிளியனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.