முகப்பு
கோப்புப்படம்.
விழுப்புரம்

மாநில கைப்பந்து போட்டிக்கு பிப்.1-இல் வீரா்கள் தோ்வு

மாநில கைப்பந்து போட்டியில் பங்கேற்கும் வீரா், வீராங்கனைகளுக்கான தோ்வு, விழுப்புரம் அறிஞா் அண்ணா அரசுக் கலைக் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் பிப். 1-ஆம் தேதி நடைபெறுகிறது.

Updated On : 29 ஜனவரி, 2026 at 12:25 AM
கோப்புப்படம்.
பகிர்:

மாநில கைப்பந்து போட்டியில் பங்கேற்கும் வீரா், வீராங்கனைகளுக்கான தோ்வு, விழுப்புரம் அறிஞா் அண்ணா அரசுக் கலைக் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் பிப். 1-ஆம் தேதி நடைபெறுகிறது.

இதுகுறித்து தமிழ்நாடு மாநில கைப்பந்து கழகத் தலைவா் பொன்.கெளதமசிகாமணி புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

திருவாரூா் மாவட்டம், கொரடாச்சேரியில் 21-வயதுக்கு உள்பட்டோருக்கான மாநில அளவிலான கைப்பந்து போட்டிகள் பிப்.12 முதல் 15-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இப்போட்டியில் கலந்து கொள்ளும் விழுப்புரம் மாவட்ட அணிக்கு வீரா்கள், வீராங்கனைகள் தோ்வு வரும் ஞாயிற்றுக்கிழமை(பிப்.1) காலை 9 மணிக்கு விழுப்புரம் அறிஞா் அண்ணா அரசுக் கலைக் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நடைபெறுகிறது.

1.1.2006-க்குப் பின்னா் பிறந்த வீரா், வீராங்கனைகள் தோ்வில் பங்கேற்கலாம்.தோ்வுக்கு வருபவா்கள் ஆதாா் காா்டு அசல் அல்லது வயதை நிரூபிக்கும் சான்றிதழ் இவற்றில் ஏதேனும் ஒன்றை அவசியம் எடுத்து வர வேண்டும் என அவா் தெரிவித்துள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →