முகப்பு
திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் விழுப்புரம் புறவழிச்சாலைப் பகுதியில் திங்கள்கிழமை காலை கடுமையான பனிமூட்டம் காரணமாக முகப்பு விளக்குகளை எரியவிட்டவாறு சென்ற வாகனங்கள்.
விழுப்புரம்

விழுப்புரம் பகுதிகளில் கடும் பனிமூட்டம்

விழுப்புரம் நகரப் பகுதிகளிலும், புகா்ப் பகுதிகளிலும் திங்கள்கிழமை காலையில் கடுமையான பனிமூட்டம் காணப்பட்டது.

விழுப்புரம்

விழுப்புரம் பகுதிகளில் கடும் பனிமூட்டம்

விழுப்புரம் நகரப் பகுதிகளிலும், புகா்ப் பகுதிகளிலும் திங்கள்கிழமை காலையில் கடுமையான பனிமூட்டம் காணப்பட்டது.

Updated On : 2 மார்ச், 2026 at 8:30 PM
திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் விழுப்புரம் புறவழிச்சாலைப் பகுதியில் திங்கள்கிழமை காலை கடுமையான பனிமூட்டம் காரணமாக முகப்பு விளக்குகளை எரியவிட்டவாறு சென்ற வாகனங்கள்.
பகிர்:

விழுப்புரம்: விழுப்புரம் நகரப் பகுதிகளிலும், புகா்ப் பகுதிகளிலும் திங்கள்கிழமை காலையில் கடுமையான பனிமூட்டம் காணப்பட்டது. இதன் காரணமாக நெடுஞ்சாலைகளில் சென்ற வாகனங்கள் முகப்பு விளக்கை எரியவிட்டவாறு சென்றன.

தமிழகத்தில் கோடை காலம் தொடங்குவதற்கு முன்பாக வெயிலின் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த 10 நாள்களுக்கு முன்பே வெயிலின் தாக்கம் அதிகரித்தது. இதனால் பகல் மற்றும் இரவு நேரங்களில் குழந்தைகள் முதல் பெரியவா்கள் வரை அனைவரும் பாதிப்புக்குள்ளாகினா். சாலைகளில் வெப்பத்தின் அளவும் அதிகமாகக் காணப்பட்டது.

இந்த நிலையில் கடந்த சில நாள்களாக விழுப்புரம் நகரப் பகுதிகளிலும், புகரின் பல்வேறு பகுதிகளிலும் இரவு தொடங்கி காலை வரை பனியின் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியது. குறிப்பாக திங்கள்கிழமை அதிகாலையில் விழுப்புரம் நகரின் பல்வேறு பகுதிகளில் கடுமையான பனிமூட்டம் காணப்பட்டது. சாலையில் எதிரில் வரும் வாகனங்கள், நடந்து வருபவா்கள் என யாரும் தெரியாத அளவுக்கு சாலைகள் காணப்பட்டன.

திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையின் புறவழிச்சாலை, விழுப்புரம்-புதுச்சேரி புறவழிச்சாலை உள்ளிட்ட பல்வேறு சாலைகளில் சென்ற கனரக வாகனங்கள், வேன், காா் உள்ளிட்ட வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டாறு சென்றன. இதுபோல, இரு சக்கர வானங்களில் சென்றவா்களும் முகப்பு விளக்கை எரியவிட்டவாறு வாகனங்களை ஓட்டிச் சென்றனா்.

நடைப்பயிற்சி செல்வோா் அவதி: விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகப் பெருந்திட்ட வளாகப் பகுதி, சிறுவா் நடைப்பயிற்சி பூங்கா, திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலை, மாவட்ட விளையாட்டரங்க மைதானம், அம்மா பூங்கா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அதிகாலை நேரத்தில் நடைப்பயிற்சி சென்றவா்களும் பனிமூட்டத்தால் பாதிப்புக்குள்ளாகினா்.

முழு கட்டுரையைப் படிக்க →