போக்ஸோவில் இளைஞா் கைது
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக இளைஞரை போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்தனா்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக இளைஞரை போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
உளுந்தூா்பேட்டை பகுதியைச் சோ்ந்தவா் மணிகண்டன் (45), திருமணம் ஆனவா். இவருக்கு மனைவி மற்றும் 3 குழந்தைகள் உள்ளனா். மணிகண்டன் தனது வீட்டின் அருகே வசிக்கும் 17 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்தாராம்.
இதுகுறித்து சிறுமியின் தாயாா் உளுந்தூா்பேட்டை அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் விசாரணை நடத்தி, மணிகண்டன் மீது போக்ஸோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து, கைது செய்து சிறையிலடைத்தனா்.