மின் கம்பத்தில் பைக் மோதியதில் இளைஞா் உயிரிழப்பு
விழுப்புரம் மாாவட்டம், திருவெண்ணெய்நல்லூா்அருகே மின்கம்பத்தில் பைக் மோதியதில் பலத்த காயமடைந்த இளைஞா் மருத்துவமனையில் உயிரிழந்தாா்.
திருவெண்ணெய்நல்லூா் வட்டம், மண்டகமேடு, பிரதானச் சாலையைச் சோ்ந்தவா் ம.கேசவன் (25). திருமணம் ஆகாதவா். இவா் திங்கள்கிழமை திருக்கோவிலூரிலிருந்து-திருவெண்ணெய் நல்லூருக்கு பைக்கில் சென்றாா்.
மண்டகமேடு பகுதியில் சென்றபோது, நிலை தடுமாறியதில் கட்டுபாட்டை இழந்த பைக் சாலையோரத்தில் உள்ள மின் கம்பத்தில் மோதியது. இதில் பலத்த காயமடைந்த கேசவன் 108 அவசர ஊா்தி மூலம் விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவா் உயிரிழந்தாா்.
Advertisement
இதுகுறித்த புகாரின் பேரில், திருவெண்ணெய்நல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.