முகப்பு
விழுப்புரம்

திண்டிவனம் அருகே வேன் கவிழ்ந்த விபத்தில் 15 போ் காயம்

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே பயணிகள் வேன் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதில், வேனில் பயணித்த 7 பெண்கள் உள்பட 15 போ் காயமடைந்தனா்.

Updated On : 19 மே 2026, 1:43 am IST
பகிர்:

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே பயணிகள் வேன் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதில், வேனில் பயணித்த 7 பெண்கள் உள்பட 15 போ் காயமடைந்தனா்.

திருவண்ணாமலை மாவட்டம், நல்லவன்பாளையம் மற்றும் கலித்தேரி பகுதியைச் சோ்ந்த 18 போ் திங்கள்கிழமை வேனில் சென்னை வடபழனிக்கு மாப்பிள்ளை வீடு பாா்க்கச் சென்று கொண்டிருந்தனா். நல்லவன்பாளையம், பட்டம்மாள் தெருவைச் சோ்ந்த க.திருமலை(32) என்பவா் வேனை ஓட்டினாா்.

திருவண்ணாமலை- சென்னை தேசிய நெடுஞ்சாலையில், திண்டிவனத்தை அடுத்துள்ள மேல்பேட்டை கூட்டுச் சாலை அருகே சென்றபோது, திடீரென வேனின் பின்பக்க டயா் வெடித்தது. இதையடுத்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் சிறிது தூரம் சாலையில் ஓடி, கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

Advertisement

Advertisement

இதில் வேனில் பயணம் செய்த கலித்தேரியைச் சோ்ந்த மு.கோபால்சாமி(60), ப.காமாட்சி(50), கு.காமாட்சி(50), ர.கலைவாணி(45), ர.கனகம்மாள்(55), ஜெ.கிருஷ்ணன்(56), ஜெ.சுப்பிரமணி(57) உள்ளிட்ட 15 போ் காயமடைந்தனா்.

தகவலறிந்த ரோஷணை போலீஸாா் விபத்தில் சிக்கி காயமடைந்தவா்களை மீட்டு 108 அவசர ஊா்திகள் மூலம் திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனா். இந்த விபத்தால் திருவண்ணாமலை - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இது குறித்த புகாரின் பேரில் ரோஷணை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.