* தொகுதி பெயர்
செய்யூர் (தனி)
* தொகுதி வரிசை எண்
34
* சிறப்புகள்
செய்யூர் சட்டப்பேரவைத் தொகுதி 2011 முதல் செயல்பட்டு வருகிறது. அச்சிறுப்பாக்கம் (தனி) தொகுதி கடந்த 1962-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. 2011-ஆம் ஆண்டு தொகுதி சீரமைப்பின்போது, இதில் சித்தாமூர் ஊராட்சி ஒன்றியம், இலத்தூர் ஊராட்சி ஒன்றியம், இடைக்கழிநாடு பேரூராட்சி ஆகிய பகுதிகள் பிரிக்கப்பட்டு செய்யூர் (தனி) தொகுதியில் இணைக்கப்பட்டன.
இத்தொகுதியில் வரலாற்றுச் சிறப்புமிக்க ஆலம்பரை கோட்டை, ஆன்மிகத் தலங்களான மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர்பீடம், அச்சிறுப்பாக்கம் மழைமலை மாதா அருள்தலம் ஆகியவை உள்ளன.
* தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்:
இலத்தூர் ஊராட்சி ஒன்றியம்,
சித்தாமூர் ஊராட்சி ஒன்றியம்,
இடைக்கழிநாடு பேரூராட்சி.
சித்தாமூர் ஒன்றியம்: மேல்மருவத்தூர்,சோத்துப்பாக்கம்,
சித்தாமூர்,பொலம்பாக்கம், பேரம்பாக்கம், பெருக்கரணை,
விளங்காடு உள்ளிட்ட 34 ஊராட்சிகள்.
இலத்தூர் ஒன்றியம்: கூவத்தூர், வேட்டக்காரகுப்பம்,
பொய்கைநல்லூர், நெற்குணப்பட்டு, கடலூர், லத்தூர்,
பச்சம்பாக்கம் உள்ளிட்ட 41 ஊராட்சிகள்.
இடைக்கழிநாடு பேரூராட்சி: 21 வார்டுகள்.
* வாக்காளர்கள்
ஆண்கள் : 1,05,633
பெண்கள் : 1,05,477
திருநங்கைகள் : 25
மொத்தம் : 2,11,135
* இதுவரை எம்எல்ஏ க்கள்....
அச்சிறுப்பாக்கம் (தனி) தொகுதியாக இருந்தபோது:
1962 - வெங்கடசுப்பா ரெட்டி (காங்கிரஸ்)
1967 - பி.எஸ்.எல்லப்பன் (சுதந்திரா)
1971 - வி.பாலசுந்தரம் (திமுக)
1977 - எத்திராஜ் (அதிமுக)
1980 - சி.கணேசன் (அதிமுக)
1984 - கே.எத்திராஜ் (அதிமுக)
1989 - மருத்துவர் ராமகிருஷ்ணன் (திமுக)
1991 - மருத்துவர் ராமகிருஷ்ணன் (அதிமுக)
1996 - எஸ்.மதிவாணன் (திமுக)
2001 - ஆ.செல்வராஜ் (பாமக)
2006 - சங்கரி நாராயணன் (திமுக)
செய்யூர் (தனி) தொகுதி உருவாக்கப்பட்ட பின்:
2011 - விஎஸ்.ராஜீ (அதிமுக)
* தேர்தல் நடத்தும் அலுவலர்/ தொடர்பு எண்
ஜெ.ஜெயகுமார்,
தனித் துணை ஆட்சியர்,சமூக பாதுகாப்புத் திட்டம், காஞ்சிபுரம்.
செல்லிடப்பேசி எண்: 94454 77826
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.