தமிழகத் தேர்தல் களம் 2016

மதுவுக்கு மக்கள் நலக் கூட்டணியே முற்றுப்புள்ளி வைக்கும்: ஜி.கே. வாசன் பேச்சு

தினமணி

தேமுதிக, தமாகா, மக்கள் நலக் கூட்டணியால் மட்டுமே மதுவுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும் என்றார் தமாகா தலைவர் ஜி.கே. வாசன்.

தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறில் புதன்கிழமை நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் அவர் பேசியது:

தேமுதிக, தமாகா, மக்கள் நலக் கூட்டணி தமிழக மக்களுக்குக் கடவுள் தந்த வரப்பிரசாதம். 50 ஆண்டுகால திராவிட கட்சிகளின் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கவே இதுபோன்ற பலமான கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது.

நேர்மை, தூய்மை, எளிமையான கூட்டணி இது. கூட்டுக் குடும்பமாக இணைந்து ஒரு மிகப் பெரிய கூட்டணியை உருவாக்கி உள்ளோம். இக்கூட்டணி படிப்படியாக முன்னேறி வருகிறது.

திமுக, அதிமுக ஆகியவை பண பலம், ஆள் பலம், அதிகார பலம் உள்ள கட்சிகள். ஆனால், எங்களுக்கு மக்கள் செல்வாக்குள்ளது. நல்ல தலைவர்கள் ஒன்று சேர்ந்து உள்ளோம்.

திருவையாறு தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் ஜீவக்குமார், மது ஒழிப்புக்கான போராட்டத்தில் ஈடுபட்டு படுகொலை செய்யப்பட்ட தியாகியின் மகன்.

மது ஒழிப்பு என்பது தனிப்பட்ட கட்சியின் கொள்கை அல்ல. மக்கள் பிரச்னையாக உள்ளது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க இந்தக் கூட்டணியால் மட்டுமே முடியும். இந்தக் கூட்டணியில் உள்ள வேட்பாளர்களை ஒவ்வொரு கட்சியினரும் தங்களுடைய கட்சி வேட்பாளராகக் கருதி பணியாற்றி, வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றார் வாசன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுற்றுலாப்பயணிகள் வருகை அதிகரிப்பு: வாலிநோக்கம் கடற்கரையில் அடிப்படை வசதிகள் செய்துதரக் கோரிக்கை

ராமேசுவரம், திருவாடானையில் பலத்த மழை

அனுமதியின்றி மாட்டு வண்டிப் பந்தயம், மஞ்சுவிரட்டு : 10 போ் மீது வழக்கு

66 கட்டடங்களை அப்புறப்படுத்த குறிப்பாணை

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் ஒருங்கிணைந்த தமிழ் முதுகலைப் பட்டப் படிப்பு

SCROLL FOR NEXT