தமிழகத் தேர்தல் களம் 2016

வெற்றியோடு சந்திக்கிறேன்- பிரசாரம் விடுபட்ட நகர் மக்களுக்கு கருணாநிதி உறுதி

தற்போது பிரசாரம் செய்ய வர முடியாத ஊர்களுக்கு வெற்றி மகிழ்வில் பங்கு கொள்ள நான் நிச்சயமாக நேரில் வருகை தருவேன் என கருணாநிதி உறுதியளித்துள்ளார்.

தினமணி

சென்னை: தற்போது பிரசாரம் செய்ய வர முடியாத ஊர்களுக்கு வெற்றி மகிழ்வில் பங்கு கொள்ள நான் நிச்சயமாக நேரில் வருகை தருவேன் என கருணாநிதி உறுதியளித்துள்ளார்.

திமுக தலைவர் கருணாநிதி மே மாதம் 3 ஆம் தேதி  ஸ்ரீவில்லிபுத்தூர், அருப்புக்கோட்டை பகுதிகளில் வேன் மூலமும் மாலையில் மதுரையிலும் பிரசாரம் செய்வார் என அறிவிக்கப்பட்டிருந்தது.

தற்போது கருணாநிதியின் பயணத் திட்டம் முழுவதும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. வேன் மூலம் பிரசாரம் செய்வது அடியோடு தவிர்க்கப்பட்டுள்ளது.

மே மாதம் 3 ஆம் தேதி மதுரையிலும், 5 ஆம் தேதி சென்னையிலும், 8 ஆம் தேதி சென்னை தங்கச்சாலை மணிகூண்டு பகுதியிலும், 14 ஆம் தேதி சேப்பாக்கத்திலும் நடைபெறும் பொதுக்கூட்டங்களில் கருணாநிதி பேசுகிறார் . இதுதவிர தான்போட்டியிடும் திருவாரூர் தொகுதியில் 11 ஆம் தேதி பிரசாரம் செய்திறார்.

பிரசாரப் பயணத்திட்டம் மாறுதல் தொடர்பாக கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

முதலில் வெளியிடப்பட்ட சுற்றுப் பயண நிகழ்ச்சிகளில் விடுபட்டுப் போன மாவட்டங்களின் கழகச் செயலாளர்கள் சிலர், தங்கள் மாவட்டங்களில் பிரச்சாரப் பயணம் வேண்டும் என்று வற்புறுத்திக் கேட்டுக் கொண்டிருந்த நிலையில், முதலில் வெளியிடப்பட்ட நிகழ்ச்சிகளிலேயே ஒரு சில மாவட்டங்கள் தற்போது விடப்பட்டுள்ளன.

காரணம் என்னுடைய முதல் கட்ட ஆறு நாள் தொடர்ச்சியான சுற்றுப் பயண நிகழ்வுகளின் அனுபவம் தான். கழகப் பொருளாளர்  மு.க.ஸ்டாலின் தனது சுற்றுப் பயணத்தை மேலும் விரிவு படுத்திக்கொள்வதாகவும், நான் அதிகம் சிரமப்படக் கூடாது என்றும் கேட்டுக் கொண்டார்.

வரவிருக்கின்ற பொதுத் தேர்தலில் கழகக் கூட்டணி வெற்றி பெற்ற பின்னர், தற்போது விடுபட்ட ஊர்களுக்கு உங்களுடைய வெற்றி மகிழ்வில் பங்கு கொள்ள நான் நிச்சயமாக நேரில்  வருகை தருவேன் என்ற உறுதியினைத் தருகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெண்கள் நினைத்தால் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தலாம் : சௌமியாஅன்புமணி

பெரம்பலூரில் தரைக்கடை வியாபாரிகள் ஆா்ப்பாட்டம்

மக்கள் குறைதீா் கூட்டத்தில் 475 மனுக்கள் ஏற்பு

பொதுமக்கள் குறைதீா் கூட்டத்தில் 27 பேருக்கு குடும்ப அட்டைகள்

புதுச்சேரியில் திருப்பரங்குன்றம் மாதிரி தீபத் தூணில் இன்று தீபம் ஏற்றும் நிகழ்ச்சி: அண்ணாமலை பங்கேற்பு

SCROLL FOR NEXT