ஜோதிட கேள்வி பதில்கள்

என் மகனுக்கு எப்போது திருமணம் நடைபெறும்? சமதோஷம் உள்ள பெண்ணைத்தான் திருமணம் செய்ய வேண்டுமா? - வாசகர், ஆரணி

DIN

உங்கள் மகனுக்கு வலுவான ஜாதகமாக அமைகிறது. லக்னாதிபதி நீச்சம் அடைந்தாலும் அந்த வீட்டுக்கதிபதியான பாக்கியாதிபதி தொழில் ஸ்தானத்தில் (கேந்திர ராசி) அமர்ந்திருப்பதால் முழுமையான நீச்சபங்க ராஜயோகத்தைப் பெறுகிறார். பூர்வபுண்ணியாதிபதியும் தொழில் ஸ்தானாதிபதியும் லாபாதிபதியும் களத்திர ஸ்தானமான ஏழாம் வீட்டில் இணைந்திருக்கிறார்கள். இதனால் புதஆதித்ய யோகம், சிவராஜ யோகம் ஆகிய சிறப்பான யோகங்கள் உண்டாகிறது. களத்திர ஸ்தானாதிபதியான சுக்கிரபகவான் அஷ்டம ஸ்தானத்தில் மறைவு பெற்றிருப்பது குறை. எனினும் நவாம்சத்தில் தன் நண்பரின் வீடான மகர ராசியில் அமர்ந்திருப்பதால் குறை குறைகிறது. அதோடு ராசியில் சனிபகவானின் பார்வையை பெறுகிறார். அவருக்கு தற்சமயம் களத்திர ஸ்தானாதிபதியின் புக்தி நடப்பதால் அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குள் படித்த நல்ல வேலையிலுள்ள பெண் அமைந்து திருமணம் கைகூடும். மற்றபடி பரிகாரம் எதுவும் தேவையில்லை. எதிர்காலம் வளமாக அமையும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை கடற்கரை - வேலூர் மின்சார ரயில் திருவண்ணாமலை வரை நீட்டிப்பு!

இந்திய பயணத்தை ஒத்திவைத்த எலான் மஸ்க், சீனா சென்றது ஏன்?

லக்னௌ தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார் ராஜ்நாத் சிங்!

கனமழை எதிரொலி: கென்யாவில் மேலும் ஒரு வாரத்திற்கு பள்ளிகள் விடுமுறை!

டி20 உலகக் கோப்பை: நியூசிலாந்து அணி அறிவிப்பு

SCROLL FOR NEXT