ஜோதிட கேள்வி பதில்கள்

என் மகனுக்கு திருமணம் கைகூடாததால் வீட்டில் ஒருவருக்கொருவர் சுமுகமான நிலையில் இல்லை. பல பரிகாரங்கள் செய்துவிட்டோம். திருமணம் எப்போது நடைபெறும்? எதிர்காலம் எப்படிஇருக்கும்?- வாசகர், சென்னை

DIN

உங்கள் மகனுக்கு விருச்சிக லக்னம், விருச்சிக ராசி. லக்னாதிபதியும் லக்னத்திலேயே அமர்ந்திருக்கிறார். பாக்கிய ஸ்தானத்தில் பூர்வபுண்ணிய ஸ்தானாதிபதி உச்சம் பெற்று அமர்ந்து லக்ன சுபர்களை பார்வை செய்கிறார். களத்திர ஸ்தானாதிபதியும் அயன ஸ்தானத்தில் ஆட்சி பெற்று அமர்ந்து நவாம்சத்தில் தன் ஆட்சி வீடான ரிஷப ராசியை அடைகிறார். அவருக்கு தற்சமயம் குருபகவானின் பார்வையில் அமர்ந்திருக்கும் கேதுபகவானின் தசையில் பிற்பகுதி நடக்கத் தொடங்கியுள்ளது. அதனால் இந்த ஆண்டுக்குள் தகுதியான பெண் தென்கிழக்கு திசையிலிருந்து அமைந்து திருமணம் கைகூடும். பிரதி தினமும் விநாயகப் பெருமானை வழிபட்டு வரவும். புத்திர பாக்கியமும் உண்டு. மற்றபடி எதிர்காலம் சிறப்பாக அமையும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஷ்மீரில் பயங்கரவாதிகளைத் தேடும் பணி தீவிரம்: இந்திய விமானப் படையினர் மீதான தாக்குதல் எதிரொலி

ரேபரேலியில் ராகுல் காந்தி: தீதும் நன்றும்...

இருசக்கர வாகனம் பழுது பாா்க்கும் தொழிலாளா் சங்க ஆண்டு விழா

பண பலத்தை பயன்படுத்தி பாஜக வதந்தி பரப்புகிறது: மம்தா பானா்ஜி குற்றச்சாட்டு

தண்ணீரில் தன்னிறைவு பெற்றுள்ளோமா...?

SCROLL FOR NEXT