ஜோதிட கேள்வி பதில்கள்

எனது பேரன் பி.எல்., படிக்க ஆசைப்படுகிறார். அதற்கு முயற்சிக்கலாமா? அல்லது வேறு படிப்பு படிக்கலாமா? இவரது குடும்பம், பெற்றோரின் எதிர்காலம் எவ்வாறு இருக்கும்?  - வாசகர், திருச்சி

தினமணி

உங்கள் பேரனுக்கு கடக லக்னம், கும்ப ராசி. பூர்வபுண்ணிய, தொழில் ஸ்தானாதிபதியான செவ்வாய்பகவான் களத்திர, நட்பு ஸ்தானத்தில் உச்சம் பெற்றிருக்கிறார். ஆறு மற்றும் ஒன்பதாம் வீடான பாக்கிய ஸ்தானத்திற்கும் அதிபதியான குருபகவான் அயன ஸ்தானத்தில் சுய சாரத்தில் அமர்ந்து, கல்வி ஸ்தானம் மற்றும் அங்கு ஆட்சி பெற்றிருக்கும் கல்வி ஸ்தானாதிபதியையும், ஆறாம் வீட்டையும், எட்டாம் வீட்டையும், அங்கு அமர்ந்திருக்கும் லக்னாதிபதியையும் பார்வை செய்கிறார். தனம், வாக்கு, குடும்பாதிபதியான சூரியபகவான் பூர்வபுண்ணிய, புத்தி ஸ்தானத்தில் புதபகவானுடன் இணைந்திருக்கிறார். ருசக யோகம், குருசந்திர யோகம், புதஆதித்ய யோகம் ஆகிய சிறப்பான யோகங்கள் உள்ளன. அரசு கிரகங்களான, சூரிய, செவ்வாய், குரு, சனி பகவான்கள் வலுவாக இருப்பதால் சட்டப்படிப்பு ஏற்றது. அதனால் அவரை தைரியமாக படிக்க வைக்கலாம். பெற்றோருக்கும் ஆதரவாக இருப்பார். எதிர்காலம் சிறப்பாக அமையும். பிரதி ஞாயிற்றுக்கிழமைகளில் சிவபெருமானை வழிபட்டு வரவும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்பு!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

SCROLL FOR NEXT