உங்கள் மகளுக்கு விருச்சிக லக்னம், மேஷ ராசி. லக்னம் மற்றும் ஆறாம் வீட்டிற்கும் அதிபதியான செவ்வாய்பகவான் களத்திர, நட்பு ஸ்தானத்தில் அமர்ந்து இருப்பது செவ்வாய்தோஷம் இல்லை என்று கூறவேண்டும். மேலும் சனிபகவானின் பார்வையை லக்னத்திலிருந்து பெறுவதால் செவ்வாய் தோஷம் இல்லை. களத்திர நட்பு ஸ்தானாதிபதியான சுக்கிரபகவான் சுக ஸ்தானத்தில் வலுவாக அமர்ந்து இருப்பதும் சிறப்பு. பூர்வபுண்ணிய புத்திர ஸ்தானத்தில் குரு, சூரிய பகவான்கள் அமர்ந்திருப்பதும் சிறப்பு. தற்சமயம், அஷ்டமகா நாகயோகம் பெற்றுள்ள ராகுபகவானின் தசையில் மாங்கல்ய ஸ்தானாதிபதியின் புக்தி நடக்கத் தொடங்க உள்ளதால் இன்னும் ஒன்றரை ஆண்டுக்குள் படித்த அரசு வேலையிலுள்ள வரன் தென்கிழக்கு திசையிலிருந்து அமைந்து திருமணம் கைகூடும். பிரதி செவ்வாய்க்கிழமைகளில் துர்க்கையையும் முருகப்பெருமானையும் வழிபட்டு வரவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.