ஜோதிட கேள்வி பதில்கள்

நான் சமீபத்தில் பணியிலிருந்து ஓய்வு பெற்றுள்ளேன். இனி நான் ஜோதிடத்தை தொழிலாக செய்யலாம் என்று நினைக்கிறேன். சொந்த வீடு கட்டும் பாக்கியம் உண்டா? வெளிநாடு செல்லும் யோகம் உண்டா? எனது மனைவி, எனது ஒரே பெண் குழந்தை இவர்களின் முன்னேற்றம் எவ்வாறு இருக்கும்?- வாசகர், திருவல்லிக்கேணி

DIN

உங்களுக்கு கும்ப லக்னம், மீன ராசி. லக்னாதிபதியும் லாபாதிபதியும் லாப ஸ்தானத்தில் இணைந்து இருப்பது சிறப்பு. தொழில் ஸ்தானாதிபதி தைரிய ஸ்தானத்தில் ஆட்சிப் பெற்று குருபகவானின் பார்வையை பெறுவதால் குருமங்கள யோகம், பூர்வபுண்ணிய ஸ்தானத்தையும் அங்கு அமர்ந்திருக்கும் சூரியபகவானையும் பார்வை செய்கிறார். இதனால் சிவராஜ யோகம் உண்டாகிறது. மேலும் குருபகவான் ஏழாம் வீட்டையும் அங்கு அமர்ந்திருக்கும் ராகுபகவானையும் பார்வை செய்கிறார். மேலும் சந்திரபகவான் குருபகவானின் கேந்திரத்தில் இருப்பதால் கஜகேசரி யோகமும் உண்டாகிறது. தற்சமயம் சுக்கிரபகவானின் தசையில் புதபகவானின் புக்தி இன்னும் இரண்டரை ஆண்டுகள் நடப்பதால் இந்த காலகட்டத்திற்குள் சொந்தவீடு கட்டவும், வெளிநாடு செல்லவும் வாய்ப்புண்டாகும். ஜோதிடத்தையும் தொழிலாக எடுத்துச் செய்யலாம். பிரதி செவ்வாய்க்கிழமைகளில் துர்க்கையையும் முருகப்பெருமானையும் வழிபட்டு வரவும். உங்கள் குடும்ப முன்னேற்றம் சிறப்பாக அமையும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாநில சிலம்பம் போட்டியில் சங்ககிரியைச் சோ்ந்த மாணவா்கள் வெற்றி

ஈரான் மீன்பிடிப் படகு கேரளத்தில் தடுத்து நிறுத்தம்: 6 தமிழா்களை கடலோர காவல் படை கைது செய்து விசாரணை

ஏற்ற இறக்கத்தில் பங்குச்சந்தை: சிறிதளவே உயா்ந்தது சென்செக்ஸ்!

கல்வித் துறையில் தொடா் முன்னேற்றம், இந்தியாவை விக்சித் பாரத்க்கு நெருக்கமாகக் கொண்டு செல்கிறது: குடியரசுத் துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் பெருமிதம்

தில்லியில் கொலை வழக்கு கைதி போலீஸ் பிடியில் இருந்து தப்பினாா்

SCROLL FOR NEXT