பிரதோஷமும் நந்தியும்
ஞாயிற்றுக்கிழமை வரும் பிரதோஷத்தில் நந்தியையும் நாயகனாம் சிவபெருமானையும் வழிபட்டு வந்தால் மங்கல நிகழ்ச்சிகள் மனையில் நடைபெற வழி பிறக்கும். சுபகாரியங்கள் நடைபெறும்.
ஞாயிற்றுக்கிழமை வரும் பிரதோஷத்தில் நந்தியையும் நாயகனாம் சிவபெருமானையும் வழிபட்டு வந்தால் மங்கல நிகழ்ச்சிகள் மனையில் நடைபெற வழி பிறக்கும். சுபகாரியங்கள் நடைபெறும்.
திங்கள்கிழமை வரும் பிரதோஷத்தில் வழிபட்டால் மனச்சஞ்சலங்கள் நீங்கி, மன அமைதி கிடைக்கும். நல்லெண்ணங்கள் உருவாகும்.
செவ்வாய்க்கிழமை வரும் பிரதோஷத்தில் வழிபட்டால் உணவுப்பற்றாக்குறை அகலும். உத்தியோக வாய்ப்பும் உதிரி வருமானங்களும் பெருகும்.
Advertisement
புதன் கிழமை வரும் பிரதோஷத்தில் வழிபட்டால் புத்திர விருத்தியும் ஆண் சந்தான பாக்கியமும் கிட்டும்.
வியாழக்கிழமை வரும் பிரதோஷத்தில் வழிபட்டால் படிப்புத் தடை அகலும். கல்வி ஞானம் பெருகும். மதிநுட்பத்தினால் மகத்துவம் காண்பீர்கள்.
வெள்ளிக்கிழமை வரும் பிரதோஷ வழிபாட்டினால் பகை விலகும். பாசம் கூடும். உறவினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.
சனிக்கிழமை வரும் பிரதோஷ வழிபாட்டினால் சகல பாக்கியங்களும் கிடைக்கும்.
எல்லா பிரதோஷங்களிலும் வழிபாடு செய்வது இனிமையான வாழ்க்கையை ஏற்படுத்தி தரும். நல்ல வாழ்க்கை அமைய நந்தியை நாடுவது நல்லது.
பிரதோஷத்தன்று நந்தியை வழிபட்டால் நலன்களும் வளங்களும் கிடைக்கும். பதினோறு பிரதோஷங்கள் தொடர்ந்து பூஜிப்பவர்களுக்கு சகல யோகங்களும் வந்து சேரும்.
எட்டு பிரதோஷங்கள் தொடர்ந்து விரதமிருந்து நந்திபெருமானை வழிபடுவதன் மூலம் மறுபிறவி இல்லை என்பர்.
எனவே, பெருமை மிகுந்த பிரதோஷ நாளை மனதில் பதித்துக்கொண்டு வழிபடுவதால் வியக்கும் விதத்தில் வாழ்க்கை அமையும்.