ஜோதிட கேள்வி பதில்கள்

எனது மகனுக்கு ஆரோக்கியம் எப்படி உள்ளது? குழந்தைபாக்கியம் எப்போது கிடைக்கும்? நல்ல உத்தியோகம் கிடைக்கும் வாய்ப்பு உள்ளதா?  - வாசகர், பட்டுக்கோட்டை

DIN

உங்கள் மகனுக்கு விருச்சிக லக்னம், ரிஷப ராசி, ரோகிணி நட்சத்திரம். தனம் வாக்கு குடும்பம் மற்றும் பூர்வபுண்ணிய ஸ்தானாதிபதியான குருபகவான் நீச்சபங்க ராஜயோகம் பெற்று களத்திர ஸ்தானத்தையும் அங்கு உச்சம் பெற்று அமர்ந்திருக்கும் பாக்கியாதிபதியையும் பாக்கிய ஸ்தானத்தையும் லாப ஸ்தானத்தையும் அங்கு நீச்சபங்க ராஜயோகம் பெற்றிருக்கும் சுக்கிரபகவானையும் பார்வை செய்கிறார். தற்சமயம், ராகு மகாதசையில் சுக்கிர புக்தி நடக்கிறது. உங்கள் மருமகளுக்கு கன்னி லக்னம், விருச்சிக ராசி, அனுஷ நட்சத்திரம். பூர்வபுண்ணிய புத்திர ஸ்தானாதிபதியான சனிபகவான் தைரிய ஸ்தானத்தில் பாக்கியாதிபதி, லாபாதிபதி மற்றும் அயன ஸ்தானாதிபதிகளுடன் இணைந்திருக்கிறார். தற்சமயம் அவருக்கு சுக்கிரபகவானின் தசையும் நடக்கிறது. இந்த ஆண்டு ஜூலை மாதத்திற்குள் அவர்களுக்கு குழந்தைபாக்கியம் உண்டாகும். பிரதி வியாழக்கிழமைகளில் குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் பிரதி ஞாயிற்றுக்கிழமைகளில் சிவபெருமானையும் வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கலால் கொள்கை வழக்கில் அமலாக்கத் துறை சா்வாதிகாரப் போக்குடன் செயல்பட்டுள்ளது: உச்சநீதிமன்றத்தில் கேஜரிவால் தரப்பில் பதில்

சமூக வலைதளங்களில் போலி தகவல் பரப்புவோா் மீது கடும் நடவடிக்கை: எஸ்பி எச்சரிக்கை

மிக்ஜம், வெள்ளம்: தமிழகத்துக்கு ரூ. 276 கோடி புதிய பணிகளை தொடங்க கட்டுப்பாடு

அதிகரிக்கும் வெயில் தாக்கம்: இளநீா் விலை ரூ.90-ஆக உயா்வு

பொருளாதார வளா்ச்சிக்கு நவீன தொழில் நுட்பங்கள் அவசியம்: ரிசா்வ் வங்கி முன்னாள் ஆளுநா் சி. ரங்கராஜன்

SCROLL FOR NEXT