ஜோதிட கேள்வி பதில்கள்

சொந்தமாக தொழில் செய்து வரும் என் மகன் சொந்த வீடு கட்டி, பின்னர் அதனை விற்று வங்கிக் கடனை அடைத்துவிட்டு, வாடகை வீட்டில் குடியிருக்கிறார். வீடு வாங்கும் யோகம் எப்போது அமையும்? தொழில் நல்லபடி தொடருமா? நானும் என் மனைவியும் தனியாக வசிக்கிறோம். நாங்கள் அனைவரும் கூட்டுக்குடும்பமாக வசிக்கலாமா? எனது ஆயுள் எவ்வாறு இருக்கும்?  - வாசகர், ஈரோடு

DIN

உங்கள் மகனுக்கு துலாம் லக்னம், கடக ராசி, புனர்பூசம் நட்சத்திரம். தொழில் ஸ்தானாதிபதி தொழில் ஸ்தானத்திலேயே ஆட்சி பெற்று வர்கோத்தமத்தில் உள்ளது சிறப்பாகும். லக்னம் மற்றும் எட்டாம் வீட்டிற்கும் அதிபதியான சுக்கிரபகவான் பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டில் தனம் வாக்கு குடும்ப ஸ்தானமான இரண்டாம் வீட்டிற்கும் களத்திர நட்பு ஸ்தானமான ஏழாம் வீட்டிற்கும் அதிபதியான செவ்வாய்பகவானுடன் இணைந்து இருக்கிறார். தைரிய ஸ்தானமான மூன்றாம் வீட்டிற்கும் ருணம் ரோகம் சத்ரு ஸ்தானமான ஆறாம் வீட்டிற்கும் அதிபதியான குருபகவான் தைரிய ஸ்தானமான மூன்றாம் வீட்டில் மூலதிரிகோணம் பெற்றமர்ந்து ஐந்தாம் பார்வையாக களத்திர நட்பு ஸ்தானத்தையும் அங்கு அமர்ந்திருக்கும் புதபகவானின் மீதும், ஏழாம் பார்வையாக பாக்கிய ஸ்தானத்தையும் அங்கு அமர்ந்திருக்கும் செவ்வாய், சுக்கிரபகவான்களையும் ஒன்பதாம் பார்வையாக லாப ஸ்தானத்தையும் பார்வை செய்கிறார். தற்சமயம் சுக்கிரபகவானின் தசையில் சுயபுக்தி நடக்கிறது. இதே ஆண்டு அக்டோபர் மாதத்திற்குப்பிறகு நீங்கள் உங்கள் மகனுடன் இணைந்து கூட்டுக்குடும்பமாக வாழலாம். 2022 -ஆம் ஆண்டு மறுபடியும் அவருக்கு தனி வீடு வாங்கும் யோகம் உள்ளது. அவர் செய்து வரும் தொழிலில் படிப்படியான முன்னேற்றம் உண்டாகும். உங்களுக்கு தீர்க்காயுள் உண்டு. பிரதி வெள்ளிக்கிழமைகளில் மகாலட்சுமியை வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது தெரியுமா?

காலமானார் எஸ். வீரபத்திரன்

நாளை நீட் தேர்வு

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்குச் செல்ல அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

SCROLL FOR NEXT