ஜோதிட கேள்வி பதில்கள்

தனியார் துறையில் வேலை

DIN


எனது இளைய மகனுக்கு 26 வயது ஆகிறது. எம்பிஏ படித்துள்ளார். கடந்த இரண்டு வருடங்களாகப் பல தேர்வுகள் எழுதியும், முயற்சிகள் செய்தும் நிரந்தர வேலை கிடைக்கவில்லை. அவருக்கு அரசாங்க வேலை கிடைக்குமா? தனியார்துறையில் வேலை கிடைக்குமா? திருமணம் எப்போது நடைபெறும்? சொந்தத்திலா? அசலிலா? ஏதாவது பரிகாரம் செய்ய வேண்டுமா?

வாசகர், சென்னை-76.

உங்கள் மகனுக்கு சிம்ம லக்னம் கடகராசி ஆயில்யம் நட்சத்திரம் லக்னாபதியான சூரிய பகவான் தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டில் தன லாபாதிபதியான புத பகவானுடனும், கேது பகவானுடனும் இணைந்திருக்கிறார். பூர்வ புண்ணிய புத்திர புத்தி ஸ்தானமான ஐந்தாம் வீட்டிற்கும், அஷ்டமஸ்தானமான எட்டாம் வீட்டிற்கும் அதிபதியான குரு பகவான் தனம், வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் அமர்ந்து ஐந்தாம் பார்வையாக ருணம், ரோகம், சத்ரு ஸ்தானமான ஆறாம் வீட்டையும், ஏழாம் பார்வையாக அஷ்டம ஸ்தானத்தையும் அங்கு உச்சம் பெற்றமர்ந்திருக்கும் தொழில் ஸ்தானதிபதியான சுக்கிர பகவானையும், ஒன்பதாம் பார்வையாக தொழில் ஸ்தானத்தையும் அங்கு அமர்ந்திருக்கும் சூரிய பகவானையும் (சிவராஜ யோகம்) புத, கேது பகவான்களையும் பார்வை செய்கிறார்.

சுக ஸ்தானமான நான்காம் வீட்டிற்கும், பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டிற்கும் அதிபதியான செவ்வாய் பகவான் அயன ஸ்தானமான பன்னிரண்டாம் வீட்டில் நீச்சம் பெற்று அந்த பன்னிரண்டாம் வீட்டிற்கு அதிபதியான ஆட்சி பெற்றுள்ள சந்திர பகவானுடன் இணைந்து இருப்பதால், முழுமையான நீச்ச பங்க ராஜ யோகத்தைப் பெறுகிறார்.

அதோடு சந்திர மங்கள யோகமும் உண்டாகிறது. ருணம், ரோகம், சத்ரு ஸ்தானமான ஆறாம் வீட்டிற்கும், களத்திர நட்பு ஸ்தானமான ஏழாம் வீட்டிற்கும் அதிபதியான சனி பகவான் களத்திர நட்பு ஸ்தானத்திலேயே ஆட்சி பெற்றிருக்கிறார். சூரிய, செவ்வாய் பகவான்கள் நவாம்சத்தில் உச்சம் பெற்றிருக்கிறார்கள்.

சுக்கிர பகவான் உச்ச வர்கோத்தமத்தில் இருக்கிறார். அவருக்கு தற்சமயம் சுக்கிர பகவானின் தசையில் பிற்பகுதி நடப்பதால் தனியார்துறையில் நல்ல வேலை கிடைக்கும். இன்னும் இரண்டாண்டுகளுக்குள் படித்த பெண் அசலில் அமைந்து திருமணம் கைகூடும். பிரதி வெள்ளிக்கிழமைகளில் பெருமாளையும் தாயாரையும வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வள்ளலாா் சா்வதேச மைய பணிகளை நிறுத்திவைக்க அறிவுறுத்தப்படும்: உயா்நீதிமன்றத்தில் தமிழக அரசு உறுதி

வாக்கு எண்ணும் மையத்தில் மாவட்ட தோ்தல் அலுவலா் ஆய்வு

செங்குந்தா் பொறியியல் கல்லூரியில் நீா்மோா்ப் பந்தல் திறப்பு

கல்லூரி மாணவா் மயங்கி விழுந்து சாவு

ஸ்ரீகிருஷ்ணஜென்ம பூமி வழக்கில் ‘வக்ஃபு’ சட்டம் பொருந்தாது: ஹிந்துக்கள் தரப்பு வாதம்

SCROLL FOR NEXT