விநாயகரை வழிபடவும்
என் மகனுக்கு இரண்டாண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. குழந்தை இல்லை. நிலையானவேலையும் தற்போது இல்லை. அவருக்கு எப்பொழுது நல்ல சம்பளத்துடன் நிலையான வேலை கிடைக்கும்?
என் மகனுக்கு இரண்டாண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. குழந்தை இல்லை. நிலையானவேலையும் தற்போது இல்லை. அவருக்கு எப்பொழுது நல்ல சம்பளத்துடன் நிலையான வேலை கிடைக்கும்? குழந்தை பாக்கியம் எப்பொழுது உண்டாகும்? பரிகாரம் ஏதும் செய்ய வேண்டுமா?
வாசகர், குரோம்பேட்டை.
உங்கள் மகனுக்கு விருச்சிக லக்னம், கடக ராசி, பூசம் நட்சத்திரம். லக்னம், ஆறாம் வீட்டிற்கும் அதிபதியான செவ்வாய் பகவான் அயன ஸ்தானமான பன்னிரண்டாம் வீட்டில் விபரீத ராஜயோகம் பெற்றமர்ந்திருக்கிறார்.
தனம், வாக்கு, குடும்ப ஸ்தானமான இரண்டாம் வீட்டிற்கும், பூர்வ புண்ணிய ஸ்தானமான ஐந்தாம் வீட்டிற்கும் அதிபதியான குருபகவான் அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டில் அமர்ந்து ஐந்தாம் பார்வையாக அயன ஸ்தானத்தையும் அங்கமர்ந்திருக்கும் செவ்வாய் பகவானையும் (குரு மங்கள யோகம்) ஏழாம் பார்வையாக இரண்டாம் வீட்டையும் அங்கமர்ந்திருக்கும் சனி, சுக்கிர பகவான்களையும், ஒன்பதாம் பார்வையாக சுக ஸ்தானத்தையும் பார்வை செய்கிறார். பாக்கியாதிபதியான சந்திர பகவான் பாக்கிய ஸ்தானத்திலேயே ஆட்சிபெற்று கேது பகவானுடன் இணைந்திருக்கிறார். லக்னத்தில் புத ஆதித்யர்கள் அமர்ந்திருப்பது சிறப்பு. இதனால் படிப்புக்கேற்ற நல்ல வருமானத்துடன் தகுதியான வேலை இந்த ஆண்டு இறுதிக்குள் கிடைத்து விடும். இன்னும் ஒன்றரை ஆண்டுக்குள் மழலை பாக்கியம் உண்டாகும். பிரதி தினமும் விநாயகப் பெருமானை வழிபட்டு வரவும்.