ஜோதிட கேள்வி பதில்கள்

சிங்கப்பூரில் பிறந்த எனது பேத்தியின் ஜாதகப்படி, அவரது கல்வி, வேலைவாய்ப்பு, மண வாழ்க்கை எவ்வாறு இருக்கும் என்பதைக் கூறவும்..!

சிங்கப்பூரில் பிறந்த எனது பேத்தியின் ஜாதகப்படி, அவரது கல்வி, வேலைவாய்ப்பு, மண வாழ்க்கை எவ்வாறு இருக்கும் என்பதைக் கூறவும்..!

DIN

சிங்கப்பூரில் பிறந்த எனது பேத்தியின் ஜாதகப்படி, அவரது கல்வி, வேலைவாய்ப்பு, மண வாழ்க்கை எவ்வாறு இருக்கும் என்பதைக் கூறவும்..!

- வாசகர், சென்னை - 82. 

உங்கள் பேத்திக்கு கடக லக்னம், விருச்சிக ராசி, கேட்டை நட்சத்திரம். நீச்சன் எங்கு உச்சம் அடைவாரோ அந்த வீட்டுக்குரிய கிரகமான சுக்கிரன் பகவான் லக்ன கேந்திரமான ஏழாம் வீட்டில் அமர்ந்திருப்பதால், சந்திர பகவானுக்கு நீச்ச பங்க ராஜயோகம் உண்டாகிறது. சுக்கிர பகவானுடன் புத பகவானும் இணைந்து, இரு சுபக் கிரகங்களும் லக்னத்தைப் பார்வை செய்கிறார்கள். 
ஐந்து, பத்தாம் வீட்டுக்கதிபதியான செவ்வாய் பகவான் பன்னிரண்டாம் வீட்டில் அமர்ந்து நவாம்சத்தில் விருச்சிக ராசியில் (ஆட்சி வீடு) அமர்கிறார். ஆறு, ஒன்பதாம் வீடுகளுக்கு அதிபதியான குரு பகவான் ஆறாம் வீடான தன் மூலத்திரிகோண வீட்டில் அமர்ந்து ஐந்தாம் பார்வையாக தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டையும், ஏழாம் பார்வையாக பன்னிரண்டாம் வீட்டையும் அங்கமர்ந்திருக்கும் செவ்வாய் பகவானையும் பார்வை செய்கிறார். 
இதனால் தர்மகர்மாதிபதி யோகம், குரு மங்கள யோகம் ஆகிய சிறப்பான யோகங்கள் உண்டாகின்றன. குருபகவானின் ஒன்பதாம் பார்வை இரண்டாம் வீட்டின் மீதும், அங்கமர்ந்திருக்கும் களத்திர, அஷ்டம ஆயுள் ஸ்தானாதிபதியான சனி பகவானின் மீதும், கேது பகவானின் மீதும் படிகிறது. 
தற்சமயம் புத பகவானின் தசை முடிந்து கடக லக்னத்திற்கு லக்ன சுபராக கருதப்படும் கேது மஹா தசை நடக்க இருப்பதால் கல்வியில் நல்ல முன்னேற்றத்தை அடைவார். வேலைவாய்ப்பு, மண வாழ்க்கை சீராக அமையும். பிரதி திங்கள்கிழமைகளில் விநாயகப் பெருமானை வழிபட்டு வரவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆஸ்திரேலிய பயங்கரவாதத் தாக்குதல்: பலி எண்ணிக்கை 15 ஆக உயர்வு!

வ.சோ. பள்ளி மாணவா்கள் இருவா் தமிழக ஹாக்கி அணிக்குத் தோ்வு

போளூா் ஸ்ரீகைலாசநாதா் கோயில் கும்பாபிஷேகம்: ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பங்கேற்பு

சாலை விபத்தில் ஒருவா் பலி!

ஜாம்பவான்கள் சந்திப்பு...

SCROLL FOR NEXT