முகப்பு
ஜோதிட கேள்வி பதில்கள்

வெளி நாட்டில் வசிக்கும் என் மகனுக்கும், மருமகளுக்கும் குழந்தை இல்லை. ஜாதகப்படி வம்சம் வளர குழந்தை பாக்கியம் கிடைக்குமா? அவர்கள் தாயகம் திரும்புவார்களா அல்லது வெளிநாட்டில் தொடர்ந்து வசிப்பார்களா?

வெளி நாட்டில் வசிக்கும் என் மகனுக்கும், மருமகளுக்கும் குழந்தை இல்லை. ஜாதகப்படி வம்சம் வளர குழந்தை பாக்கியம் கிடைக்குமா? அவர்கள் தாயகம் திரும்புவார்களா அல்லது வெளிநாட்டில் தொடர்ந்து வசிப்பார்களா?

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:13 AM
பகிர்:

வெளி நாட்டில் வசிக்கும் என் மகனுக்கும், மருமகளுக்கும் குழந்தை இல்லை. ஜாதகப்படி வம்சம் வளர குழந்தை பாக்கியம் கிடைக்குமா? அவர்கள் தாயகம் திரும்புவார்களா அல்லது வெளிநாட்டில் தொடர்ந்து வசிப்பார்களா?

-கேசவன், மதுரை.

உங்கள் மகனுக்கு மிதுன லக்னம், விருச்சிக ராசி, கேட்டை நட்சத்திரம். தனாதிபதியான சந்திர பகவான் ஆறாம் வீட்டில் நீச்ச பங்க ராஜ யோகம் பெற்று, நவாம்சத்தில் கும்ப ராசியை அடைகிறார். 
லக்னம், சுக ஸ்தானமான நான்காம் வீட்டிற்கும் அதிபதியான புத பகவான், பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டில் அமர்ந்து நவாம்சத்தில் துலாம் ராசியை அடைகிறார். அவருடன் தைரிய ஸ்தானாதிபதி சூரிய பகவான் இணைந்து நவாம்சத்தில் மிதுன ராசியை அடைகிறார். 
புத ஆதித்யர்களுடன் ராகு பகவானும் இணைந்து நவாம்சத்தில் மிதுன ராசியை அடைகிறார். இவர்கள் மூவரின் பார்வையும் தைரிய ஸ்தானமான மூன்றாம் வீட்டின் மீது படிகிறது. பித்ரு காரகர் சூரிய பகவான் தன் ஆட்சி வீட்டைப் பார்வை செய்வதால் வம்சம் தழைக்கும் என்று கூற வேண்டும். 
ராகு பகவானும், சூரிய பகவானும் ஒரே பாகையில் அமர்ந்திருப்பது சிறு குறையென்றாலும் அவர்கள் இருவரும் தன, புத்திர காரகரான குரு பகவானின் சாரத்தில் அமர்ந்திருப்பதால் நன்மையே உண்டாகும். 
பூர்வ புண்ணிய புத்திர புத்தி ஸ்தானமான ஐந்தாம் வீட்டிற்கும், அயன ஸ்தானமான பன்னிரண்டாம் வீட்டிற்குமதிபதியான சுக்கிர பகவான் லாப ஸ்தானமான பதினொன்றாம் வீட்டிலமர்ந்து நவாம்சத்தில் கடக ராசியை அடைகிறார். 
ருணம், ரோகம் சத்ரு ஸ்தானமான ஆறாம் வீட்டிற்கும், லாப ஸ்தானமான பதினொன்றாம் வீட்டிற்குமதிபதியான செவ்வாய் பகவான் களத்திர நட்பு ஸ்தானத்தில் அமர்ந்து நவாம்சத்தில் கன்னி ராசியை அடைகிறார். 
அஷ்டம ஆயுள் ஸ்தானமான எட்டாம் வீட்டிற்கும், பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டிற்கும் அதிபதியான சனி பகவான் (மிதுன லக்னத்திற்கு யோக காரகராகவே கருதப்படுகிறவர்) களத்திர நட்பு ஸ்தானத்தில் திக் பலம் பெற்று (சனி பகவானுக்கு ஏழாம் வீட்டில் திக் பலம் ஏற்படும்) நவாம்சத்தில் மிதுன ராசியை அடைகிறார்.  
களத்திர நட்பு ஸ்தானமான ஏழாம் வீட்டிற்கும், தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டிற்கும் அதிபதியான குரு பகவான், லாப ஸ்தானத்திலமர்ந்து நவாம்சத்தில் மிதுன ராசியை அடைகிறார்.  
குரு பகவானின் ஐந்தாம் பார்வை தைரிய ஸ்தானமான மூன்றாம் வீட்டின் மீதும், அங்கமர்ந்திருக்கும் கேது பகவானின் மீதும் (கோடீஸ்வர யோகம்), ஏழாம் பார்வை பூர்வ புண்ணிய புத்திர புத்தி ஸ்தானமான ஐந்தாம் வீட்டின் மீதும், ஒன்பதாம் பார்வை களத்திர நட்பு ஸ்தானமான தன் மூலத் திரிகோண வீட்டின் மீதும், அங்கமர்ந்திருக்கும் செவ்வாய் (குரு மங்கள யோகம்) பகவானின் மீதும், சனி பகவானின் மீதும் படிகிறது. 
கேது பகவான் தைரிய ஸ்தானத்திலமர்ந்து நவாம்சத்தில் தனுசு ராசியை அடைகிறார். புத்திர காரகர் குரு பகவான் புத்திர ஸ்தானாதிபதியுடன் இணைந்து, புத்திர ஸ்தானத்தைப் பார்வை (குரு பார்க்க கோடி புண்ணியம்) செய்வதால், உறுதியாகப் புத்திர பாக்கியம் உண்டு. 
உங்கள் மருமகளுக்கு மிதுன லக்னம், மிதுன ராசி, திருவாதிரை நட்சத்திரம். தனம், வாக்கு, குடும்ப ஸ்தானமான இரண்டாம் வீட்டிற்கதிபதியான சந்திர பகவான் நவாம்சத்தில் மகர ராசியை அடைகிறார். 
லக்னம், சுகாதிபதியான புத பகவான் தைரிய ஸ்தானத்தில் அமர்ந்து நவாம்சத்தில் தனுசு ராசியை அடைகிறார். அவருடன் தைரிய ஸ்தானாபதி சூரிய பகவான் ஆட்சி பெற்றமர்ந்து நவாம்சத்தில் உச்சம் பெறுகிறார். 
பூர்வ புண்ணிய புத்திர புத்தி ஸ்தானமான ஐந்தாம் வீட்டிற்கும், அயன ஸ்தானமான பன்னிரண்டாம் வீட்டிற்குமதிபதியான சுக்கிர பகவான் தன ஸ்தானத்திலமர்ந்து நவாம்சத்தில் நீச்சமடைகிறார். 
ஆறு, பதினொன்றாம் வீட்டிற்கதிபதியான செவ்வாய் பகவான் பதினொன்றாம் வீட்டில் மூலத் திரிகோணம் பெற்று நவாம்சத்தில் தனுசு ராசியை அடைகிறார்.  களத்திர நட்பு ஸ்தானமான ஏழாம் வீட்டிற்கும், தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டிற்குமதிபதியான குரு பகவான் தன காரகர், புத்திர காரகராகி தன ஸ்தானத்தில் உச்சம் பெற்றமர்ந்து நவாம்சத்தில் சிம்ம ராசியை அடைகிறார். 
குரு பகவானின் ஐந்தாம் பார்வை ஆறாம் வீட்டின் மீதும், ஏழாம் பார்வை எட்டாம் வீட்டின் மீதும், அங்கமர்ந்திருக்கும் ராகு பகவானின் மீதும், ஒன்பதாம் பார்வை தன் ஆட்சி வீடான மீன ராசி, தொழில் ஸ்தானத்தின் மீதும் படிகிறது.  புத்திர காரகர் புத்திர ஸ்தானாதிபதியுடன் இணைந்திருப்பதாலும், பித்ரு காரகர் ஆட்சி பெற்றமர்ந்து இருப்பதாலும் வம்ச விருத்தி உண்டு. 
உங்கள் மகனுக்கு தற்சமயம் சூரிய பகவானின் தசையில் முற்பகுதி முடிய உள்ளது. உங்கள் மருமகளுக்கு சனி மஹா தசையில் கேது பகவானின் புக்தி நடப்பதால் அடுத்த ஆண்டு மே மாதத்திற்குப் பிறகு கருத்தரிப்பார். 
2023-ஆம் ஆண்டு ஜூன் மாதத்திற்குள் மழலை பாக்கியம் உண்டாகும். வெளிநாட்டில் இன்னும் 10 வருடங்கள் வசிக்க வாய்ப்புண்டு. பிரதி செவ்வாய்க்கிழமைகளில் துர்க்கையை வழிபட்டு வரவும். 

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments