ஜோதிடம் 
ஜோதிட கட்டுரைகள்

சொத்துகள் இழப்பு பற்றி ஜோதிடத்தில் அறிய முடியுமா?

சொத்து இழப்புக்கு வழிவகுக்கும் சில ஜோதிட சேர்க்கைகள்..

ஜோதிடர் தையூர். சி. வே. லோகநாதன்

எல்லோரும் சொத்து வாங்க வேண்டும் என்று கனவு காண்கிறார்கள். இருப்பினும், எல்லோரும் சொத்துகளைச் சொந்தமாக வைத்து நல்ல வருமானம் ஈட்ட முடியுமா? ஒருவரின் ஜாதகத்தில் உள்ள கிரக நிலைகளின் அடிப்படையில் பிறந்த தேதியின்படி வீட்டைக் கணிக்க "வேத ஜோதிடம்" நமக்கு உதவும். இது ஒரு வீட்டைச் சொந்தமாக்க அல்லது வாங்குவதற்குச் சாத்தியமான காலத்தையும் குறிக்கிறது. நேர முறைகளைப் பயன்படுத்துவதன் மூலம் அதாவது, தசா அமைப்பு - இதைச் செய்யலாம், .அதை கவனியாமல்போனால் அந்த இடம் / அசையா சொத்து , ஒன்று நல்ல விலைக்குப் போகாமலே இருக்கலாம் அல்லது அரசு ஏதோ ஒரு காரணத்திற்காக அந்த நிலத்தைக் கையகப்படுத்தும் / ஏதோ காரணத்தால் அந்த சொத்தை அனுபவிக்க முடியாமல் போகலாம்.

"பிருஹத் பராசர ஹோரா சாஸ்திரத்தில்", மகரிஷி பராசரர் சொத்து தொடர்பான விஷயங்களை மதிப்பிடுவதில் ஒருவரின் ஜாதகத்தில் 4வது வீட்டின் பங்கைக் குறிப்பிடுகிறார்.

சொத்து இழப்பு

சொத்து இழப்புக்கு வழிவகுக்கும் சில ஜோதிட சேர்க்கைகள் / அமைப்புகள் உள்ளன. இவற்றில் சில பின்வருமாறு இருக்கும்.

விதி : 1) 4 ஆம் வீட்டின் அதிபதி 3 ஆம் வீட்டில் சாதகமற்ற கிரக அம்சங்களுடன் அமைந்திருந்தால், ஒரு நபர் மிகக் குறைந்த அசையாச் சொத்தைப் பெறுகிறார். அத்தகைய 4 ஆம் வீட்டின் அதிபதி ஒருவரின் அற்ப சொத்துகளை இழக்கச் செய்யும் திறன் கொண்டவர். அதிக துன்பங்கள், அதிக இழப்பை ஏற்படுத்துகின்றன.

விதி : 2) 4 ஆம் வீட்டின் அதிபதி 6, 8 அல்லது 12 ஆம் வீட்டில் 'லக்ன' துன்பத்துடன் அமைந்திருந்தால், (லக்கினத்திற்கு பாதகாதிபதியாகவோ / அஷ்டமாதிபதியாகவோ இருந்தால் ) சொத்து இழப்புக்குக் காரணமாக இருக்கலாம்.

விதி : 3) 4 ஆம் வீட்டின் அதிபதி 8 ஆம் வீட்டிலிருந்து பாதிக்கப்பட்டாலோ அல்லது பலவீனமாக இருந்தாலோ, அது ஒருவரின் நிலத்தையும், வீட்டையும் இழக்கச் செய்யலாம்.

விதி : 4) 4 ஆம் வீட்டின் அதிபதி பலவீனமடைந்து சூரியனுடன் இருந்தால், ஒருவர் அரசு / அரசாங்க உத்தரவின் பேரில் நிலச் சொத்தை இழக்க நேரிடும்.

மேலே கூறப்பட்டவை ஒரு சில விதிகளே, நிறைய உள்ளன. ஒருவரின் ஜாதகத்தை ஆய்வு செய்த பின்னர் மீதமுள்ள விதிகளையும், கிரக அமைப்புகளையும் ஆய்வு செய்து தீர்மானிக்க முடியும்.

ஒருவர் நிலம் வாங்கி அதன் மேல் வீடு கட்டுவாரா / கட்டும் வீடு வெகு பிரம்மாண்டமாக இருக்குமா அல்லது சிறிய அளவில் கட்டுவாரா / கட்டிய வீட்டையே வாங்குவாரா / பழைய வீடு தான் அமையுமா என இதுபோல் பல கேள்விகளுக்கு ஒருவரின் ஜாதக அமைப்பு காட்டிக்கொடுக்கும்.

இந்த கட்டுரையில் ஒருவர் தனது ஜாதக அமைப்பை கவனியாமல் அரசுக்கு இருமுறை தாரை வார்த்த ஜாதக அமைப்பு, உதாரணமாகக் காணலாம்.

உதாரண ஜாதகம்

நான் எங்கு வாங்கினாலும் , அரசு எனது நிலத்தைக் கையகப்படுத்துகிறார்கள் என மனக் குமுறலோடு வந்தவரின் ஜாதகத்தை ஆய்வு செய்தபோது தான் தெரிய வந்தது, அவரின் ஜாதகத்தில் அப்படியொரு அமைப்பு இருந்தது பற்றி.

மேற்படி ஜாதகத்தில், விதி 2 மற்றும் 4 ன் படி காணும்போது; 4 ஆம் அதிபதியும் 7 ஆம் அதிபதியும் புதன் ஆகிறார். இந்த ஜாதகம் உபய லக்னமாவதால், 7ஆம் அதிபதி பாதகாதிபதி ஆகிறார். மேலும் அவருடன் சூரியன் சேர்ந்திருப்பதால், அவர் வாங்கிய நிலங்கள் அரசாங்கம் ஏதோ காரணங்களால் கையகப்படுத்தியது தெரிய வருகிறது. மேலும் நிலத்துக்கு காரக கிரகமான செவ்வாய் இவரின் ஜாதகத்தில் 2 மற்றும் 9 ஆம் இடத்தின் அதிபதி செவ்வாய் 8 ஆம் இடத்தில் இருப்பதும் (9 - பாக்கியம் அதற்கு 12 விரைய ஸ்தானம் - 8 ) ஒரு தீங்கு தரும் நிலைமை. இதனை இவர் நிலம் வாங்கும் முன்னரே ஒரு ஜோதிடரை அணுகி இருப்பின் இந்த நிலைமை நடந்திருக்காது.

நீங்கள் நிலம் வாங்கியது தவறில்லை அதனை உங்கள் வீட்டில் உள்ள வேறு நபர் ஜாதக ரீதியான பிரச்னை இல்லாதவர் பெயரில் நிலம் வாங்கி இருந்தால், இந்த நிலைமை நடந்தே இருக்காது. காரணம், அவர் இந்த நிலத்தை வாங்க மறுத்திருக்கலாம் / வேறு இடத்தினை தெரிவு செய்திருக்கலாம். அவரின் ஜாதகமே இதைப் புறந்தள்ளி இருக்கவும் கூடும். இதனால், ஜாதகத்தைக் கவனமாகப் படிப்பதன் மூலம் சொத்து தொடர்பான பல விஷயங்களைப் பெறலாம். ஒரு ஜோதிடர் பிறந்த தேதி மற்றும் ஜாதகங்களின் அடிப்படையில் சொத்து வாங்குவதற்கான ஆலோசனைகளை வழங்க முடியும். மேலும், சொத்துகளை இழக்கும் வாய்ப்புகள் மற்றும் முதலீட்டில் உள்ள அபாயங்கள் குறித்தும் அவர் கூற முடியும்.

இதுபோல் பல நிகழ்வுகள் நடந்துள்ளது. வீடு கட்டி கிரகப்ரவேச நாளன்றே மாலையில் வீடு விற்பதற்கு விளம்பரம் செய்தவர், கட்டிய வீட்டில் குடியேற முடியாமல் (ஏதோ சில பல காரணங்களால் ) வாடகை வீட்டிலேயே வசித்துக் கொண்டு இருப்பவர். எனப் பலரின் ஜாதகத்தைப் பார்க்க வேண்டி இருந்தது. அத்தனையிலும் அவர்கள் பிறந்த ஜாதக அமைப்பே முக்கிய காரணமாக இருந்ததைக் காண முடிந்தது. ஆகவே ஒரு அசையா சொத்து வாங்கும் போது, யார் பெயரில் வாங்கினால் அதில் பிரச்னையின்றி இருக்கும் என அவர்களின் ஜாதகத்தை ஆராய்ந்து வாங்கினால் அவர்கள் வாழ்நாள் முழுவதும் அதிலிருந்து நல்ல சுகமான நிகழ்வுகளை அடைய முடியும் என்றால் அது மிகை ஆகாது.

"ஜோதிடம் ஒரு முன் எச்சரிக்கையே தவிர , முடிவு அல்ல என்பதனை உணரவும்... அதே போல் ஜோதிடர் வழிகாட்டியே தவிர, கடவுள் அல்ல... பரிகாரம், என்பது ஜாதகர் மனமாற்றமும், கடவுளிடம் முழு சரணாகதியுமே ஆகும்..."

தொடர்புக்கு : 98407 17857, 91502 75369

Some astrological combinations that lead to loss of property..

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருவள்ளூா் அருகே ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்

நவ. 3-இல் அண்ணா பிறந்த நாள் நெடுந்தூர ஓட்டப்போட்டி

வேளாண் குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் 12 பேருக்கு ரூ. 8.86 லட்சத்துக்கு கடனுதவி

பல்வேறு போட்டித் தோ்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள்

இந்தாண்டுக்கான சம்பா நெற்பயிருக்கு வரும் நவ.15-க்குள் பயிா்க் காப்பீடு செய்து பயன்பெறலாம்

SCROLL FOR NEXT