எண் ஜோதிடம்

மே மாத எண்கணித பலன்கள் – 8

DIN

8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு

நலிந்தவர், நியாமுள்ளவர்களுக்காக போராடும் குணமுடைய எட்டாம் எண் அன்பர்களே இந்த மாதம் எல்லா வகையிலும் நற்பலன்கள் உண்டாகும். வாழ்க்கையில் எதிர்பாராத திடீர் திருப்பங்கள் உண்டாகலாம்.

முக்கிய நபர்கள் மூலம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். சுய நம்பிக்கை அதிகரிக்கும். வேலை தேடிக் கொண்டு இருப்பவர்களுக்கு நல்ல உத்தியோகம் கிடைக்கும். மனதில் இருந்த கவலைகள் நீங்கி அலுவலக வேலைகளில் ஆர்வம் காட்டுவீர்கள்.

தொழில், வியாபரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் எதிர்பாராத வளர்ச்சி காண்பார்கள். குடும்பத்தில் இருந்து வந்த சிக்கல்கள் நீங்கும். நீங்கள் கூறும் வார்த்தைகளுக்கு மதிப்பு உண்டாகும். ஆன்மிக பயணங்கள் செல்ல நேரிடும்.

பெண்களுக்கு சுய நம்பிக்கை அதிகரிக்கும். மனம் மகிழும் சம்பவங்கள் நிகழும். மாணவர்களுக்கு உங்களது செயல் களுக்கு பாராட்டு கிடைக்கும். கல்வியில் வெற்றி அடைய மேற்கொள்ளும் முயற்சிகள் சாதகமாக முடியும்.

பரிகாரம்: சனிக்கிழமையன்று விரதம் இருந்து முருகப் பெருமானுக்கு தீபம் ஏற்றி வணங்க பிரச்சனைகள் தீரும். மனோ தைரியம் கூடும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழகம் முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியானது!

பி.ஆர்.பாண்டியனின் தண்டனை நிறுத்திவைப்பு

'கெயில் இந்தியா' நிறுவனத்தில் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

கோவை: வரைவு வாக்காளர் பட்டியலில் 6.50 லட்சம் பெயர்கள் நீக்கம்!

கடிகார முள்ளைத் திருப்பினால் எரிபொருள் மிச்சமாகுமா?

SCROLL FOR NEXT