ஆடி மாதம் 
தமிழ் மாதப் பலன்கள்

ஆடி மாதப் பலன்கள் - மேஷம்

எப்படி இருக்கப்போகிறது இந்த ஆடி..

ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன்

கிரகநிலை

 ராசியில்  சந்திரன் தன வாக்கு குடும்ப  ஸ்தானத்தில் சுக்ரன் -  தைரிய வீரிய  ஸ்தானத்தில் குரு -  சுக  ஸ்தானத்தில் சூர்யன், புதன் (வ) -  பஞ்சம ஸ்தானத்தில் செவ்வாய், கேது -  லாப  ஸ்தானத்தில் சனி (வ), ராஹூ -  அயன சயன போக  ஸ்தானத்தில் சந்திரன்  என கிரக நிலைகள் உள்ளன.

 கிரகமாற்றங்கள்:

 17-07-2025 அன்று புதன் பகவான்  தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் இருந்து தைரிய வீரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

 26-07-2025 அன்று சுக்ர பகவான் தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் இருந்து தைரிய வீரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

 29-07-2025 அன்று செவ்வாய் பகவான் பஞ்சம ஸ்தானத்தில் இருந்து ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

 03-08-2025 அன்று புதன் பகவான் தைரிய வீரிய ஸ்தானத்தில் இருந்து சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

 பலன்:

 தெளிவான சிந்தனையும் நேர்மையான அணுகுமுறையும் கொண்ட மேஷ ராசி அன்பர்களே உங்களுக்கு வாக்குவன்மை அதிகம். இந்த காலகட்டத்தில் எடுத்துக் கொண்ட எதையும் சிறப்பாக செய்து முடிப்பீர்கள். எதிர்ப்புகள் விலகும். உங்களது செயல்களுக்கு முட்டுக்கட்டை போட்டவர்கள் விலகி விடுவார்கள். முயற்சிகள் சாதகமான பலன் தரும். பணவரத்து வருவது தாமதமாகும். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகள் சாதகமாக நடந்து முடியும்.

தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் அகலும். தடைப்பட்ட பண உதவி கிடைக்கும். தொழிலை விரிவுபடுத்துவதற்கு உகந்த காலகட்டமாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இருந்த மறைமுக எதிர்ப்புகள் நீங்கி செயல்களில் வேகம் காண்பிப்பீர்கள். எதிர்பார்த்திருந்த பணியிட மாற்றம் கிடைக்கும்.

குடும்பத்தில் இருந்த வீண் பிரச்சனைகள் நீங்கி அமைதி ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே இருந்த மனக் கசப்பு மாறும். விருந்தினர்கள் வருகை இருக்கும். குடும்ப செலவுகள் குறையும். பிள்ளைகள் உங்களது ஆலோசனைகளை கேட்பார்கள். அவர்களுக்கு தேவையானவற்றை செய்து கொடுப்பீர்கள்.

பெண்களுக்கு நீங்கள் செய்யும் காரியங்களுக்கு இருந்த தடை நீங்கும். எதிர்ப்புகள் விலகும். பணவரத்து கூடும்.

கலைத்துறையினருக்கு உடன் பணிபுரிபவர்கள் வீண் வாக்குவாதங்களில் ஈடுபடலாம். எனவே கவனமாக இருப்பது நல்லது. சாதூரியமான பேச்சின் மூலம் காரிய வெற்றி உண்டாகும். பிரிந்து சென்றவர்கள் மீண்டும் தேடி வரலாம். மற்றவர்களை திருப்தியடையச் செய்யும் வகையில் உங்களது செயல்கள் இருக்கும். டெக்னிக்கல் சார்ந்த துறையினருக்கு தொட்டதெல்லாம் துலங்கும்.

 அரசியல் துறையினருக்கு முக்கிய நபர்களின் உதவி கிடைக்கும். தன்னம்பிக்கை  அதிகரிக்கும். விடா முயற்சியுடன் ஈடுபட்டு  காரியங்களில் வெற்றி பெறுவீர்கள். விருப்பங்கள்  கைகூடும். அடுத்தவரை அதிகாரம் செய்யும் போது கவனம் தேவை. வீண் பகை ஏற்படலாம். மற்றவர்களுக்காக பொறுப்புகளை ஏற்காமல் இருப்பது நல்லது. வீண் அலைச்சல் ஏற்படலாம்.

 மாணவர்களுக்கு: கல்வி தொடர்பான கவலைகள் நீங்கும். சக மாணவர்களிடம் இருந்த கருத்து வேற்றுமை குறையும்.

 பரிகாரம்: ஸ்ரீமகா கணபதியை பூஜித்து வழிபட்டு வர எல்லாவற்றிலும் நன்மை உண்டாகும். காரிய தடைகள் நீங்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், வியாழன்;

சந்திராஷ்டம தினங்கள்:  ஆக 03, 04, 05

 அதிர்ஷ்ட தினங்கள்:  ஜூலை 27, 28

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்க நாணம்... சுதா!

மணிப்பூரில் பத்திரிகையாளர் மீது துப்பாக்கிச்சூடு

வாழ்நாள் கொண்டாட்டம்... பரமேஸ்வரி!

நடிகரின் பாதுகாவலருக்கு மாதம் ரூ.15 லட்சம் சம்பளம்! ரூ.100 கோடி சொத்து?

உடல் எடையைக் குறைத்த நிவேதா தாமஸ்!

SCROLL FOR NEXT