மாதப் பலன்கள் 
தமிழ் மாதப் பலன்கள்

புரட்டாசி மாதப் பலன்கள் - மீனம்

எப்படி இருக்கப்போகிறது இந்த மாதம்..

ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன்

கிரகநிலை:

சுக ஸ்தானத்தில் குரு - ரண ருண ரோக ஸ்தானத்தில் சுக்கிரன், கேது - களத்திர ஸ்தானத்தில் சூரியன், புதன் - அஷ்டம ஸ்தானத்தில் செவ்வாய் - அயன சயன போக ஸ்தானத்தில் சனி (வ), ராஹூ என கிரக நிலைகள் உள்ளன.

கிரகமாற்றம்:

29.09.2025 அன்று  களத்திர  ஸ்தானத்தில்  இருந்து  புதன்   அஷ்டம  ஸ்தானத்திற்கு  மாறுகிறார்.

08.10.2025 அன்று  சுக ஸ்தானத்தில்  இருந்து  குரு பகவான் அதிசாரமாக பஞசம  ஸ்தானத்திற்கு  மாறுகிறார்.

10.10.2025 அன்று  ரண ருண ரோக ஸ்தானத்தில்  இருந்து  சுக்கிரன்   களத்திர  ஸ்தானத்திற்கு  மாறுகிறார்.

பலன்:

இந்த மாதம் பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். எதிர்ப்புகள் விலகும். புதிய நண்பர்கள் கிடைப்பதுடன் அவர்களால் நன்மையும் உண்டாகும். மரியாதை கூடும். மனதில் துணிச்சல் அதிகரிக்கும். தன்னம்பிக்கையுடன் செயலாற்றுவீர்கள். தொழில் வியாபாரம் முன்னேற்ற பாதையில் செல்லும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். பிள்ளைகள் எதிர்காலம் பற்றிய சிந்தனை அதிகரிக்கும். உறவினர்கள் மூலம் நன்மை உண்டாகும். பெண்களுக்கு மனோ தைரியம் கூடும். கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பொருளாதார நிலையில் முன்னேற்றம் காணப்படும். அரசியல்வாதிகளுக்கு பலரும் பொறாமைப்படும் அளவிற்கு உங்கள் வளர்ச்சி இருக்கும். மேலிடத்திலிருந்து முழு ஆதரவும் கிடைக்கப்பெறுவீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த போட்டிகள்  குறையும். மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். மனதில் நம்பிக்கை உண்டாகும்.

பூரட்டாதி:

இந்த மாதம் மனோ தைரியம் கூடும். எதிர்ப்புகள் விலகும். எந்த சூழ்நிலையையும்  அனுசரித்து  செல்வீர்கள். வீண்குழப்பம், காரிய தடை ஏற்பட்டு நீங்கும். வாகனங்களில் செல்லும் போது கூடுதல் கவனம் தேவை. பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும். கவன தடுமாற்றம் உண்டாகலாம். பணவரத்து தாமதப்படும்.

உத்திரட்டாதி:

இந்த மாதம் தொழில் வியாபாரத்தில் சீரான நிலை காணப்படும். எதிர்பார்த்தபடி ஆர்டர்கள் கிடைப்பது தாமதமாகலாம். அரசாங்கம்  தொடர்பான காரியங்களில் மெத்தனபோக்கு காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு விருப்பமற்ற இடமாற்றம் உண்டாகலாம்.

ரேவதி:

இந்த மாதம் குடும்பத்தில் இருப்பவர்களின் செயல்கள் டென்ஷனை உண்டாக்கும். கணவன், மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கும். பிள்ளைகள் விஷயத்தில் கவனம் தேவை. தாய், தந்தையின் உடல்நிலையில் எச்சரிக்கை அவசியம்.

பரிகாரம்: பெருமாளை வணங்கி வழிபட எல்லா நன்மைகளும் உண்டாகும். பணவரத்து கூடும். கடன் பிரச்சனை தீரும்.

சந்திராஷ்டம தினங்கள்:   செப் 24, 25, 26

அதிர்ஷ்ட தினங்கள்:      அக் 04, 05

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பேரலையின் சாட்சியம்

அயோத்திதாச பண்டிதரின் அரசியல் விமர்சனக் கட்டுரைகள்

என்னைப் பார்க்கவே தயங்குவார் பழனிசாமி; அவரை முதல்வராக்கியது நாங்கள்! - டிடிவி தினகரன் பரபரப்பு பேச்சு

தொண்டர்களை ஒழுங்குபடுத்த வேண்டாமா? TVK-வுக்கு நீதிமன்றம் கேள்வி! | செய்திகள்: சில வரிகள் | 18.9.25

மாத்தளை சோமு நூறு சிறுகதைகள்

SCROLL FOR NEXT