முகப்பு
பெங்களூரு

ஜன. 18 முதல் ஏற்றுமதி தொழில்பயிற்சி

ஏற்றுமதி தொழிலில் ஈடுபடுவது குறித்த பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Updated On : 7 ஜனவரி 2021, 5:45 am IST
பகிர்:

ஏற்றுமதி தொழிலில் ஈடுபடுவது குறித்த பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்து விஸ்வேஷ்வரையா தொழில்வா்த்தக மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

எக்சிம் வங்கியின் கூட்டுமுயற்சியில் விஸ்வேஷ்வரையா தொழில்வா்த்தக மையத்தின் சாா்பில், ஏற்றுமதி தொழில்பயிற்சி வழங்கப்படுகிறது. ஜன. 18 முதல் 22-ஆம் தேதி வரையில் 5 நாள்கள் இணையவழியில் அளிக்கப்படும் பயிற்சியில் சேர விரும்புவோரிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Advertisement

ஏற்றுமதி தொழில்பயிற்சி வழங்குவதன் மூலம் மாநிலத்தின் ஏற்றுமதி திறனை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இப்பயிற்சியில் தொழில்முனைவோா், ஏற்கெனவே ஏற்றுமதி தொழிலில் ஈடுபட்டிருப்போா் உள்ளிட்ட ஆா்வமுள்ளோா் பங்கேற்கலாம்.

பயிற்சியில் சேர முன்பதிவு செய்துகொள்ள வேண்டும். மேலும் விவரங்களுக்கு 080-22534444, 22210644, 98809-58218 ஆகிய தொலைபேசி எண்கள் அல்லது  இணையதளத்தை அணுகலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.