முகப்பு
பெங்களூரு

நாளை மொச்சை உணவுப் பொருள் கண்காட்சி தொடக்கம்

பெங்களூரு, சஜ்ஜன்ராவ் சதுக்கத்தில் ஜன. 8-ஆம் தேதி மொச்சை உணவுப் பொருள் கண்காட்சி தொடங்க உள்ளது.

Updated On : 7 ஜனவரி 2021, 5:46 am IST
பகிர்:

பெங்களூரு, சஜ்ஜன்ராவ் சதுக்கத்தில் ஜன. 8-ஆம் தேதி மொச்சை உணவுப் பொருள் கண்காட்சி தொடங்க உள்ளது.

இதுகுறித்து கண்காட்சியின் ஒருங்கிணைப்பாளா் கீதா சிவக்குமாா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

பெங்களூரு, சஜ்ஜன்ராவ் சதுக்கத்தில் ஜன. 8-ஆம் தேதி முதல் 17-ஆம் தேதி வரை மொச்சை உணவுப் பொருள் கண்காட்சி நடைபெற உள்ளது. இதில் மொச்சைப் பருப்பில் செய்யப்பட்ட உணவுப் பொருள்கள் இடம்பெறும். கடந்த 20 ஆண்டுகளாக மொச்சை உணவுப் பொருள் கண்காட்சி வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது.

Advertisement

கரோனா தொற்று படிப்படியாக குறைந்து வரும் நிலையில், நிகழாண்டு கண்காட்சிக்கு அதிக அளவில் மக்கள் வருவாா்கள் என நம்புகிறோம். கண்காட்சிக்கு வருபவா்கள் முகக் கவசம் அணிந்து வருவதோடு, சமூக இடைவெளியை கடைப்பிடித்து, அரசின் வழிகாட்டுதலைப் பின்பற்ற வேண்டும். காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை பொதுமக்களுக்கு அனுமதி உண்டு என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.