நடிகர் சூர்யா 
புத்தக வெளி

குழந்தைகளுக்கான புத்தகத்தை வெளியிடும் நடிகர் சூர்யா!

நடிகர் சூர்யாவின் புதிய முயற்சி - 'கதைகளில் பேசும் குழந்தைகள்'

இணையதளச் செய்திப் பிரிவு

தமிழில் குழந்தைகளுக்கு பிரத்யேகமாக எழுதப்படும் புத்தகங்கள் மிகக் குறைவு. அதுவும் இலக்கியம் சார்ந்து அவர்களுக்கு அறிமுகப்படுத்தும் புத்தகங்கள் பெருமளவில் இல்லை என்றே சொல்லிவிடலாம்.

இந்த நிலையில் குழந்தைகளுக்கு இலக்கியத்தை அறிமுகப்படுத்தும் வகையில் ‘கதைகளில் பேசும் குழந்தைகள்’ என்கிற புத்தகம் வெளியாகவுள்ளது.

இது குறித்து தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் நடிகர் சூர்யா, “மனிதர்கள் பேசப் பழகிய காலத்தில் முதலில் தோன்றிய பேச்சுமொழி இலக்கியம், ‘கதை’யாகவே இருந்திருக்கக் கூடும்! கதைகளின் வழியேதான் அனுபவ அறிவும், நீதிநெறியும் அடுத்த தலைமுறைக்குப் பகிரப்படுகிறது. இலக்கிய வாசிப்பையும், எழுத்தாளர்களையும் குழந்தைகளின் உலகத்துக்குள் எடுத்துச் செல்லும் முயற்சியாக 'கதைகளில் பேசும் குழந்தைகள்!' தொடர் ‘யாதும்’ மாத இதழில் வெளிவந்து அகரம் பவுண்டேஷன் வெளியீடாக தற்போது நூல் வடிவம் பெறுகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.

புத்தகத்தின் முகப்பு

‘மழைக்கண்’ சிறுகதைத் தொகுப்பின் வழியாக கவனம் பெற்ற எழுத்தாளர் செந்தில் ஜெகன்நாதன் இந்த புத்தகத்தை எழுதியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மாதவரம் - சோழிங்கநல்லூர் மெட்ரோ ரயில் சேவை எப்போது?

பாடகர் ஸுபின் கார்க்கிற்கு லட்சக்கணக்கான மக்கள் பிரியாவிடை! இறந்த பின்னரும் லிம்கா சாதனை புத்தகத்தில் இடம்!

டிடிவி தினகரனுடன் பேசியது என்ன? அண்ணாமலை விளக்கம்!

குலசை தசரா திருவிழா: கொடியேற்றத்துடன் தொடக்கம்!

அமெரிக்காவுக்கு மிகவும் முக்கியமான நட்பு நாடு இந்தியா! - ஹெச்1-பி விசா பிரச்னைக்கு மத்தியில் மார்கோ ரூபியோ பேச்சு

SCROLL FOR NEXT