சேப்பியன்ஸ் - யுவால் நோவா ஹராரி
இது மனிதனின் கதை. வாலில்லா குரங்கிலிருந்து வந்த அவன், உலகை ஆட்டிப் படைக்கும் ஒருவனாக விசுவரூபம் எடுத்துள்ளது பற்றிய கதை இது. நம் இனத்தின் கதையை இவ்வளவு அழகாகவும், சுவாரசியமாகவும், விறுவிறுப்பாகவும், செறிவாகவும், சிந்தனையைத் தூண்டும் விதத்திலும் கூற முடியுமா? நம்மை மலைக்க வைக்கிறார் ஹராரி. நம்மை மருள வைக்கின்ற எண்ணற்ற விஷயங்கள் இதில் இடம்பெற்றுள்ளன.
அவற்றில் சில:
வரலாற்றைத் திரும்பிப் பார்ப்பதே படிப்பினைகளைக் கற்றுக்கொள்ளத்தானே? நம் மூதாதையரின் தவறுகளிலிருந்து நாம் பாடம் கற்றுக்கொள்ளாவிட்டால் மனித குலத்திற்கு என்ன நிகழும் என்பதை எச்சரிக்கத் தவறவில்லை இந்நூலாசிரியர். அமர்க்களமான எழுபதாயிரம் ஆண்டுகால வரலாற்றுச் சுற்றுலாவிற்கு உங்களைத் தயார்படுத்திக் கொண்டு உள்ளே நுழையுங்கள்!
- குமாரசாமி
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.