வர்த்தகம்

யெஸ் வங்கி: கடன் பத்திர வெளியீடு மூலம் ரூ.330 கோடி மூலதனம்

DIN

தனியார் துறையைச் சேர்ந்த யெஸ் வங்கி, பசுமை உள்கட்டமைப்பு கடன் பத்திர வெளியீட்டின் மூலம் ரூ.330 கோடி மூலதனம் பெற்றது.
இதுகுறித்து யெஸ் வங்கி மும்பை பங்குச் சந்தைக்கு அளித்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
பசுமை உள்கட்டமைப்பு கடன் பத்திரங்கள் மூலம் விரிவாக்க நடவடிக்கைகளுக்கு தேவையான மூலதனத்தைப் பெற முடிவு செய்யப்பட்டது. அதையடுத்து, அந்த வகை கடன் பத்திரங்களைத் தனியார் நிதி நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்து ரூ.330 கோடி திரட்டப்பட்டது என்று யெஸ் வங்கி அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
பசுமை உள்கட்டமைப்பு கடன் பத்திரங்கள் 7 ஆண்டுகள் முதிர்வு காலத்தைக் கொண்டவை. இதற்கான ஆண்டு வட்டி விகிதம் 7.62 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மும்பை பங்குச் சந்தையில் இக்கடன் பத்திரங்கள் பட்டியலிடப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே 9-இல் சங்கர மடத்தில் ஷியாமா சாஸ்திரிகள் ஜெயந்தி: 350 இசைக் கலைஞா்கள் பங்கேற்பு

கூழங்கலச்சேரி கிராமத்தில் குடிநீா் தட்டுப்பாடு: பொதுமக்கள் அவதி

பிளஸ் 2: சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் 87.13% போ் தோ்ச்சி

ஜிஎஸ்டி மேல்முறையீட்டு தீா்ப்பாயத்தின் முதல் தலைவராக சஞ்சய குமாா் மிஸ்ரா பதவியேற்பு

குண்டா் சட்டத்தில் 31 போ் கைது

SCROLL FOR NEXT