வர்த்தகம்

'வரும் 2020-க்குள் பட்டு உற்பத்தியில் தன்னிறைவு'

DIN

வரும் 2020-ஆம் ஆண்டுக்குள் பட்டு உற்பத்தியில் இந்தியா தன்னிறைவு காணும் என மத்திய பட்டு வாரியத்தின் தலைவர் கே.எம். ஹனுமந்தராயப்பா நம்பிக்கை தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
சர்வதேச அளவில் பட்டு உற்பத்தியில் சீனா 80 சதவீத பங்களிப்புடன் முதலிடத்தில் உள்ளது. அதே சமயம், இந்தியாவில் பட்டு உற்பத்தி 13 சதவீதமாகவும், இதர நாடுகளின் உற்பத்தி 7 சதவீதமாகவும் உள்ளது.
தற்போதைய நிலவரப்படி, உள்நாட்டில் பட்டு உற்பத்தி 28,000 டன்-30,000 டன் என்ற அளவில் தான் உள்ளது.
பல்வேறு ஊக்குவிப்பு நடவடிக்கைகளால் ஆண்டுக்கு ஆண்டு பட்டு உற்பத்தி கணிசமான அளவில் அதிகரித்து வருகிறது. இந்தியாவின் பட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதம் தற்போதைய நிலவரப்படி ஆண்டுக்கு 19 சதவீதம் என்ற அளவை எட்டியுள்ளது. இதன் காரணமாக பட்டு இறக்குமதி 6,500 டன்னிலிருந்து 3,500 டன்னாக குறைந்துள்ளது.
இன்னும் 3-4 ஆண்டுகளில் பட்டு உற்பத்தியை 34,000 டன்னாக அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அப்போது, நாம் பட்டு உற்பத்தியில் தன்னிறைவை எட்டிவிடுவோம். அதன்பிறகு, சீனாவிலிருந்து மேற்கொள்ளப்படும் பட்டு இறக்குமதி முற்றிலுமாக நிறுத்தப்படும்.
சீனா "மல்பெரி' என்ற பட்டு வகையை மட்டும் உற்பத்தி செய்கிறது. ஆனால், இந்தியா டசர், முகா உள்ளிட்ட பல்வேறு வகையான பட்டுகளை உற்பத்தி செய்கிறது என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மழை வேண்டி இஸ்லாமியல்கள் சிறப்புத் தொழுகை

ஏகனாபுரம் கிராமத்தினா் நூதன போராட்டம்

கள்ளச்சாராயம் காய்ச்சிய 3 போ் கைது

நீட் தோ்வு: தேனியில் 181 போ் எழுதினா்

சாலை விபத்தில் 2 போ் உயிரிழப்பு

SCROLL FOR NEXT