வர்த்தகம்

கே.வி.ஐ.சி. விற்பனை 9.25% அதிகரிப்பு

DIN

காதி & கிராமத் தொழில் வாரியத்தின் (கே.வி.ஐ.சி.) பொருள்கள் விற்பனை சென்ற டிசம்பரில் 9.25% அதிகரித்தது.
இதுகுறித்து அந்த வாரியத்தின் தலைவர் வி.கே. சக்úஸனா வெள்ளிக்கிழமை தெரிவித்ததாவது:
நாடு முழுவதும் கே.வி.ஐ.சி.க்கு 7,100 விற்பனையகங்கள் உள்ளன. இந்த விற்பனையகங்களில் பொருள்கள் விற்பனை சென்ற டிசம்பரில் 9.25 சதவீதம் அதிகரித்தது. ரூ.500 ரூ.1,000 கரன்ஸிகள் வாபஸ் பெறுவது குறித்த மத்திய அரசின் அறிவிப்பையடுத்து முதல் 2-3 தினங்களில் மட்டுமே விற்பனையில் பாதிப்பு ஏற்பட்டது. அதன்பிறகு, டிஜிட்டல் முறையிலான பணப் பரிவர்த்தனைகள் ஊக்குவிக்கப்பட்டதையடுத்து விற்பனை பாதிப்புக்குள்ளாகவில்லை.
ரூ.2,000-க்கும் அதிகமாக பொருள்கள் வாங்கி டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தும் வாடிக்கையாளர்களுக்கு பரிசு திட்டங்கள் அறிவிக்கப்பட்டன.
கே.வி.ஐ.சி.யும் டிஜிட்டல் பணப் பரிமாற்றத்துக்கு கூடுதலாக 1 சதவீத தள்ளுபடி சலுகையை வழங்கியது.
கடந்த ஒன்றரை மாதங்களாக ரொக்கமற்ற பணப் பரிவர்த்தனைகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக கே.வி.ஐ.சி. சார்பில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்திய பயணத்தை ஒத்திவைத்த எலான் மஸ்க், சீனா சென்றது ஏன்?

லக்னௌ தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார் ராஜ்நாத் சிங்!

கனமழை எதிரொலி: கென்யாவில் மேலும் ஒரு வாரத்திற்கு பள்ளிகள் விடுமுறை!

டி20 உலகக் கோப்பை: நியூசிலாந்து அணி அறிவிப்பு

மருத்துவ காப்பீட்டுக்கான உச்ச வயது வரம்பு நீக்கம்: முழு விவரம்

SCROLL FOR NEXT