வர்த்தகம்

நவரத்தினங்கள், ஆபரணங்கள் ஏற்றுமதியில் பின்னடைவு

DIN

நாட்டின் ஒட்டுமொத்த ஏற்றுமதியில் 14 சதவீத பங்களிப்பையும், அதிக அளவில் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்புகளையும் வழங்கி வரும் நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் துறையின் ஏற்றுமதி கடந்த ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான ஐந்து மாத காலத்தில் 8.12 சதவீதம் பின்னடைவைக் கண்டுள்ளது.
இதுகுறித்து நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் ஏற்றுமதி கூட்டமைப்பின் (ஜிஜேஇபிசி) புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: 
ஜப்பான், சீனா, அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட முக்கிய ஏற்றுமதி நாடுகளிடையே தேவை குறைந்து போனதையடுத்து தங்க ஆபரணங்கள், தங்க பதக்கங்கள்-நாணயங்கள், கச்சா வைரம் ஆகியவற்றின் ஏற்றுமதி கணிசமான அளவில் பின்னடைந்துள்ளது. 
இதன் காரணமாக, நடப்பு ஆண்டின் ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான கால அளவில் நவரத்தினங்கள், ஆபரணங்கள் ஏற்றுமதி 8.12 சதவீதம் குறைந்து ரூ.87,750 கோடியானது (1,350 கோடி டாலர்). கடந்த ஆண்டு இதே கால அளவில் இவற்றின் ஏற்றுமதி ரூ.95,550 கோடியாக (1,470 கோடி டாலர்) இருந்தது.
தங்க ஆபரணங்கள் ஏற்றுமதி 8 சதவீதம் சரிந்து 130 கோடி டாலராகவும், தங்க பதக்கம்- நாணயம், கச்சா வைரம் ஆகியவற்றின் ஏற்றுமதி முறையே 18 சதவீதம் மற்றும் 5 சதவீதம் பின்னடைவைக் கண்டது.
அதேசமயம், வெள்ளி ஆபரணங்கள் ஏற்றுமதி 167 கோடி டாலரிலிருந்து கணிசமாக அதிகரித்து 200 கோடி டாலரை எட்டியது. நறுக்கப்பட்ட மற்றும் பட்டை தீட்டப்பட்ட வைரங்களின் ஏற்றுமதி வெறும் 0.51 சதவீதம் அளவுக்கே வளர்ச்சி கண்டது.
இறக்குமதியைப் பொருத்தவரையில், கச்சா வைரத்தின் இறக்குமதி 8.84 சதவீதம் அதிகரித்து 770 கோடி டாலராகவும், அதேசமயம், தங்க கட்டிகள் இறக்குமதி 38.5 சதவீதம் சரிந்து 126 கோடி டாலராகவும் இருந்தது என அந்தப் புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

25,000 ஆசிரியர் நியமன விவகாரம்: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை

மூளைக்குள் ஊடுருவும் நியூராலிங் பாதுகாப்பானதா? இணை நிறுவனரின் அதிர்ச்சி தகவல்!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடரைக் கைப்பற்றிய வங்கதேசம்!

SCROLL FOR NEXT