வர்த்தகம்

ஜவுளித் துறையில் அந்நிய நேரடி முதலீடு மும்மடங்கு உயர்வு

DIN

இந்திய ஜவுளித் துறையில் மேற்கொள்ளப்பட்ட அந்நிய நேரடி முதலீடு கடந்த இரண்டு ஆண்டுகளில் மும்மடங்கு அளவுக்கு வளர்ச்சி கண்டுள்ளதாக மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
கடந்த ஒன்றரை முதல் இரண்டு ஆண்டுகள் வரையிலான கால அளவில் இந்திய ஜவுளித் துறையில் அந்நிய நேரடி முதலீட்டாளர்கள் மேற்கொண்ட முதலீடு மூன்று மடங்கு அதிகரித்துள்ளது.
செயற்கை இழை தொழில் துறையில் ஈடுபட்டுள்ளவர்கள் நிச்சயம் நல்ல செய்தியை எதிர்பார்க்கலாம். அமைச்சகங்களுக்கு இடையிலான குழு அத்துறையினரின் பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில் நடவடிக்கை எடுக்கும். அந்த துறையின் வளர்ச்சியை ஊக்குவிக்கத் தேவையான என்னென்ன சலுகைகளை அளிப்பது, குறைந்த விலையில் பொருள்களை உற்பத்தி செய்வது எவ்வாறு என்பது குறித்து அந்த குழு பரிசீலித்து வருகிறது என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்பு!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

SCROLL FOR NEXT