வர்த்தகம்

லக்ஷ்மி விலாஸ் வங்கி நிகர லாபம் சரிவு

DIN

கடந்த செப்டம்பர் 30-ஆம் தேதியுடன் முடிவடைந்த இரண்டாவது காலாண்டில் லக்ஷ்மி விலாஸ் வங்கியின் நிகர லாபம் 84 சதவீதம் சரிவடைந்துள்ளது. 
இது குறித்து வங்கியின் நிர்வாக இயக்குநர் பார்த்தசாரதி முகர்ஜி சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியது: லக்ஷ்மி விலாஸ் வங்கி கடந்த செப்டம்பர் 30-ஆம் தேதியுடன் முடிவடைந்த இரண்டாவது காலாண்டில் நிகர லாபமாக ரூ.10.50 கோடியை ஈட்டியுள்ளது. 
மதுரையில் உள்ள இரு கிளைகளில் தவறான ஆவணங்கள் மூலம் ரூ.80.43 கோடி தொழில் கடன் பெறப்பட்டுள்ளது. இது குறித்து முûறாக விசாரணை நடத்தி அதைத் திரும்ப வசூலிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். வாராக்கடன் அதிகரித்துள்ளதால் நிகர லாபம் 84 சதவீதம் சரிவடைந்துள்ளது. 
இரண்டாவது காலாண்டில் வங்கியின் மொத்த வர்த்தகம் 11.62 சதவீதம் அதிகரித்து ரூ.52,386 கோடியாக உள்ளது. கடன் அளிப்பு ரூ.20,253 கோடியிலிருந்து தற்போது ரூ.23,215 கோடியாக அதிகரித்துள்ளது. டெபாசிட் தொகை 9.34 சதவீதம் அதிகரித்து தற்போது ரூ.29,171 கோடியாக உயர்ந்துள்ளது. நிகர வட்டி வருமானம் (என்ஐஐ) ரூ.364 கோடியிலிருந்து தற்போது ரூ.450 கோடியாக அதிகரித்துள்ளது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மத்திய முன்னாள் அமைச்சர் ஸ்ரீனிவாச பிரசாத் காலமானார்

தஞ்சாவூர் அருகே காய்கறி வியாபாரி வெட்டிப் படுகொலை

தப்பிக்க வழியே இல்லை: 3 நாள்களுக்கு வெப்ப அலை! அதன்பிறகு?

ஈரோடு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறையில் சிசிடிவி பழுது

சத்தீஸ்கரில் கோர விபத்து: நின்றிருந்த லாரி மீது டிரக் மோதியதில் 8 பேர் பலி

SCROLL FOR NEXT