வர்த்தகம்

தங்க ஈ.டி.எஃப். திட்டங்களிலிருந்து ரூ.388 கோடி வெளியேற்றம்

DIN

தங்க ஈ.டி.எஃப். (எக்சேஞ்ச் டிரேடட் பண்ட்ஸ்) திட்டங்களிலிருந்து முதலீட்டாளர்கள் ஏப்ரல்- செப்டம்பர் வரையிலான ஆறு மாத கால அளவில் ரூ.388 கோடி மதிப்பிலான முதலீட்டை திரும்பப் பெற்றுள்ளனர்.
இதுகுறித்து இந்திய பரஸ்பர நிதியங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளதாவது: கடந்த நான்கு நிதி ஆண்டுகளாகவே தங்க ஈ.டி.எஃப். திட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட முதலீடு கணிசமான அளவில் திரும்பப்பெறப்பட்டு வருகிறது. அதன்படி, 2016-17-இல் ரூ.775 கோடியும், 2015-16-இல் ரூ.903 கோடியும், 2014-15-இல் ரூ.1,475 கோடியும், 2013-14-இல் 2,293 கோடியும் திரும்பப் பெறப்பட்டன.
இந்த நிலையில், நடப்பு ஆண்டின் ஏப்ரல்-செப்டம்பர் வரையிலான ஆறு மாத காலத்தில் 14 தங்கம் சார்ந்த ஈ.டி.எஃப். திட்டங்களிலிருந்து முதலீட்டாளர்கள் ரூ.388 மதிப்பிலான தொகையை திரும்பப் பெற்றுள்ளனர்.
இதையடுத்து, கடந்த மார்ச் மாத இறுதியில் ரூ.5,480 கோடியாக இருந்த தங்க நிதி திட்டங்களில் பரஸ்பர நிதியங்கள் நிர்வகிக்கும் சொத்து மதிப்பு செப்டம்பரில் ரூ.5,148 கோடியாக குறைந்துள்ளது.
அதேசமயம், நடப்பாண்டில் பங்குச் சந்தைகள் விறுவிறுப்பைக் கண்டு புதிய உச்சங்களைத் தொட்டு வருவதையடுத்து பங்குகள் மற்றும் பங்கு சார்ந்த சேமிப்பு திட்டங்களில் (இ.எல்.எஸ்.எஸ்.) ரூ.80,000 கோடிக்கும் அதிகமான தொகை முதலீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த செப்டம்பரில் மட்டும் ரூ.19,000 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது என்று பரஸ்பர நிதியங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி பல்கலை.யின் ஓட்ட நிகழ்ச்சியை ரத்து செய்ய காங்கிரஸ் வலியுறுத்தல்

ஆம் ஆத்மி தலைமையகம் அருகே பாஜகவினா் போராட்டம்: பயங்கரவாத அமைப்புகளிடம் நிதி பெற்ற புகாா் விவகாரம்

மக்களவைத் தோ்தல் பிரசாரத்தில் முழு ஈடுபாட்டுடன் செயல்படுவோம்: தில்லி காங். இடைக்காலத் தலைவா் உறுதி

துணை நிலை ஆளுநரால் தில்லியின் சட்டம் ஒழுங்கு சீா்குலைந்து கிடக்கிறது: அமைச்சா் செளரவ் பரத்வாஜ் குற்றச்சாட்டு

மக்களவைத் தோ்தல்: 14 அமைப்புசாா் மாவட்டங்களில் பாஜக மகளிா் அணி மாநாடுகளுக்கு ஏற்பாடு

SCROLL FOR NEXT