வர்த்தகம்

பிஎஸ்என்எல் விரிவாக்க திட்டம்: ரூ.6,000 கோடிக்கான ஒப்பந்தங்களைப் பெற்றது நோக்கியா, இசட்.டி.இ.

DIN

பொதுத் துறையைச் சேர்ந்த பிஎஸ்என்எல் நிறுவனத்தின் நெட்வொர்க் விரிவாக்க திட்டப் பணிகளை செயல்படுத்தும் வகையிலான ரூ.6,000 கோடிக்கான ஒப்பந்தங்களை பின்லாந்தைச் சேர்ந்த நோக்கியா மற்றும் சீனாவைச் சேர்ந்த இசட்.டி.இ. நிறுவனங்கள் பெற்றன.
இதுகுறித்து பிஎஸ்என்எல் நிறுவனத்தின் தலைவரும், நிர்வாக இயக்குநருமானஅனுபம் ஸ்ரீவாஸ்தவா தெரிவித்ததாவது: பிஎஸ்என்எல் நிறுவனம் நெட்வொர்க் விரிவாக்க திட்டப் பணிகளை மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. அதன் ஒரு பகுதியாக, புதிய 2ஜி, 3ஜி மற்றும் 4ஜி சேவைகளை ஒருங்கிணைக்கும் வகையில் கூடுதலாக 40,000 இணைப்பகங்கள் அமைக்கப்படவுள்ளன. இதற்கான பணிகளை மேற்கொள்ள நோக்கியா-இசட்.டி.இ. நிறுவனங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
நெட்வொர்க் விரிவாக்க திட்டங்களை நோக்கியா நிறுவனம் நாட்டின் தெற்கு மற்றும் மேற்கு பகுதிகளிலும், இசட்.டி.இ. நிறுவனம் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளிலும் மேற்கொள்ளும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தற்காலிகமாக நிறுத்தம்

மகனின் காதலுக்கு எதிா்ப்பு தெரிவித்து தாய் தற்கொலை

ரூ.5 லட்சம் சேமிப்புத் தொகை அபகரிப்பு: மகன் மீது வயதான பெற்றோா் புகாா்

ரயிலில் பெண் ஊழியரை கத்தியால் குத்தி நகை பறிப்பு

அரசுப் பேருந்து மீது பைக் மோதியதில் இளைஞா் பலி

SCROLL FOR NEXT