வர்த்தகம்

ஆகஸ்ட் மாதத்தில் கார் விற்பனை 12% அதிகரிப்பு

PTI

உள்நாட்டு பயணிகள் வாகன விற்பனை 13.76 சதவீதம் அதிகரித்து 2,94,335 வாகனங்கள் விற்பனையாகி விற்பனை உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு இதே மாதத்தில் 2,58,737 கார்களை விற்பனை செய்திருந்தது என சியாம் வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து இந்திய மோட்டார் வாகன உற்பத்தியாளர்களின் சங்கம் (சியாம்) வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

ஆகஸ்டில் கார் விற்பனை 11.8 சதவீதம் உயர்ந்து 1,98,811 கார்கள் விற்பனையாகின, கடந்த ஆண்டு இதே கால அளவில் 1,77,829 கார்கள் விற்பனையாகி இருந்தன. .

மோட்டார் சைக்கிள் விற்பனை கடந்த மாதத்தில் 12.93 சதவீதம் அதிகரித்து 11,35,699 மோட்டார் சைக்கிள்கள் விற்பானையாகின. இது 2016 ஆகஸ்ட் மாதத்தில் 10,05,654 மோட்டார் சைக்கிள்கள் விற்பனையாகி இருந்தன.

ஆகஸ்ட் மாதத்தில் மொத்த இரு சக்கர வாகனங்களின் விற்பனை 14.69 சதவீதம் அதிகரித்து 18,91,062 இரு சக்கரங்கள் வாகனங்கள் விற்பனையாகின. கடந்த ஆண்டு இதே  மாதத்தில் 16,48,871 இரு சக்கர வாகனங்கள் விற்பனையாகி இருந்தன.

வர்த்தக வாகனங்கள் விற்பனை 23.22 சதவீதம் அதிகரித்து 65,310 வாகனங்கள் விற்பனை ஆகியுள்ளன என சியாம் தெரிவித்துள்ளது.

வாகனங்களின் விற்பனை 14.49 சதவீதம் அதிகரித்து 23,02,158 வாகனங்கள் விற்பனையாகி விற்பனை உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு இதே மாதத்தில் 20,01,802 ஆக விற்பனையாகி இருந்தது என தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

SCROLL FOR NEXT