வர்த்தகம்

நெஸ்லே இந்தியா லாபம் ரூ.311 கோடி

DIN

வேகமாக விற்பனையாகும் நுகர்வோர் பொருள்கள் தயாரிப்பில் (எஃப்எம்சிஜி) ஈடுபட்டு வரும் நெஸ்லே இந்தியா நிறுவனம் அக்டோபர்-டிசம்பர் காலாண்டில் ரூ.311.83 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனம் மும்பை பங்குச் சந்தைக்கு அளித்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
நெஸ்லே இந்தியா நடப்பு நிதி ஆண்டின் டிசம்பருடன் முடிவடைந்த காலாண்டில் விற்பனனையின் மூலம் ரூ.2,589.64 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. கடந்த நிதி ஆண்டின் இதே கால அளவில் ஈட்டிய வருவாய் ரூ.2,334.78 கோடியுடன் ஒப்பிடுகையில் இது 10.91 சதவீதம் அதிகமாகும். நிகர லாபம் 59.57 சதவீதம் உயர்ந்து ரூ.311.83 கோடியை எட்டியுள்ளது. நிறுவனத்தின் விற்பனை கடந்த 2017-ஆம் ஆண்டில், ரூ.10,000 கோடியை தாண்டி சாதனை படைத்துள்ளது என நெஸ்லே இந்தியா அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திகார் சிறையில் கேஜரிவாலை சந்திக்க சுனிதாவுக்கு அனுமதி!

சமந்தாவிடம் இத்தனை கார்களா?

பாலியல் புகாரில் சிக்கிய தேவகௌடா பேரன்! நாட்டைவிட்டு தப்பினார்

பாரதிதாசனின் 134-வது பிறந்த நாள்: முதல்வர் ஸ்டாலின் புகழஞ்சலி

மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கு: நிர்மலாதேவி குற்றவாளி

SCROLL FOR NEXT