வர்த்தகம்

இன்ஃபோசிஸ் லாபம் 38.3 சதவீதம் அதிகரிப்பு

DIN

இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப ஏற்றுமதி நிறுவனமான இன்ஃபோசிஸ் மூன்றாம் காலாண்டு நிகர லாபம் 38.3 சதவீதம் அதிகரித்தது.
இதுகுறித்து அந்த நிறுவனம் மும்பை பங்குச் சந்தைக்கு வெள்ளிக்கிழமை அளித்த அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
நடப்பு 2017-18 நிதி ஆண்டின் அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான மூன்றாம் காலாண்டில் இன்ஃபோசிஸ் நிறுவனம் ரூ.17,794 கோடி வருவாய் ஈட்டியது. கடந்த நிதி ஆண்டின் இதே கால அளவில் ஈட்டிய வருவாய் ரூ.17,273 கோடியுடன் ஒப்பிடுகையில் இது 3 சதவீதம் அதிகம்.
நிகர லாபம் ரூ.3,708 கோடியிலிருந்து 38.3 சதவீதம் அதிகரித்து ரூ.5,129 கோடியாக இருந்தது.
நடப்பு நிதி ஆண்டில் நிறுவனத்தின் விற்பனை வளர்ச்சி ரூபாய் மதிப்பு அடிப்படையில் 5.5-6.5 சதவீதம் என்ற அளவில் இருந்து வருகிறது.
மூன்றாம் காலாண்டு லாபம் அதிகரித்ததையடுத்து, பங்கு ஒன்றின் மூலம் ஈட்டும் அடிப்படை வருவாய் ரூ.6.29 உயர்ந்தது. டிசம்பர் காலாண்டு நிலவரப்படி பணியாளர்கள் எண்ணிக்கை 2.01 லட்சமாக உள்ளது என இன்ஃபோசிஸ் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உ.பி.யில் ஒரு தொகுதியில் மட்டுமே பாஜக வெற்றி பெறும்: ராகுல் காந்தி

ஓடிடியில் ஆளவந்தான்!

ரூ.50 ஆயிரம் சம்பளத்தில் பொதுத்துறை நிறுவனத்தில் வேலை!

டி20 உலகக் கோப்பையில் இமாலய இலக்குகளுக்கு வாய்ப்பில்லை: ஷிகர் தவான்

பிபவ் குமார் விவகாரம்: தில்லி காவல் துறை பொய் கூறுவது ஏன்? ஆம் ஆத்மி

SCROLL FOR NEXT