வர்த்தகம்

"ஜிஎஸ்டி-யால் ஆடைகள் ஏற்றுமதி 10 சதவீதம் குறையும்'

தினமணி

ஜிஎஸ்டி அமலாக்கத்தின் எதிரொலியால் நடப்பு நிதி ஆண்டில் ஆடைகள் ஏற்றுமதி 10 சதவீதம் அளவுக்கு சரியும் என இந்திய ஆடை உற்பத்தியாளர்கள் சங்கம் (சிஎம்ஏஐ) தெரிவித்துள்ளது.
 இதுகுறித்து அந்த சங்கத்தின் தலைவர் ராகுல் மேத்தா செய்தியாளர்களிடம் கூறியதாவது:
 கடந்த 2016-17 நிதி ஆண்டில் 1,738 கோடி டாலராக காணப்பட்ட ஆடைகள் ஏற்றுமதி 2017-18-இல் 4 சதவீதம் குறைந்து 1,670 கோடி டாலரானது. இந்த நிலையில், கடந்த 2017 அக்டோபர் முதல் ஆடைகள் ஏற்றுமதியில் தொய்வு நிலையே தொடர்ந்து வருகிறது. இதற்கு ஜிஎஸ்டியை அமல்படுத்தியதே முக்கிய காரணம். ஏனெனில், அதில் சேர்க்கப்பட்டிருந்த பல உள்ளீட்டு வரிகள் திருப்பி அளிக்கப்படவில்லை.
 இதனால், ஆடைகள் ஏற்றுமதி நடப்பு நிதி ஆண்டில் மாதத்துக்கு 8-9 சதவீதம் என்ற அளவில் தொடர்ந்து சரிவைக் கண்டு வருகிறது. இதனை வைத்துப் பார்க்கும்போது 2018-19-இல் ஆடைகள் ஏற்றுமதி 10 சதவீதம் அளவுக்கு வீழ்ச்சியடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 நாட்டின் மொத்த ஆடைகள் ஏற்றுமதியில் 70 சதவீதம் பருத்தி ஆடைகளின் பங்களிப்பு. இந்த நிலையில், பருத்தி விலையில் 20 சதவீதம் உயர்வு ஏற்பட்டுள்ளதும் ஏற்றுமதி துறையை வெகுவாக பாதித்துள்ளது என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி மக்களவைத் தொகுதிகளுக்கு காங்கிரஸ் -ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பு குழு அமைப்பு

மேற்கு தில்லி பாஜக வேட்பாளா் கமல்ஜீத் செராவத் வேட்புமனு தாக்கல் : ராஜஸ்தான் முதல்வா் பங்கேற்பு

தில்லி மகளிா் ஆணையத்தில் சட்டவிரோத நியமனம் 52 ஒப்பந்த ஊழியா்கள் நீக்கம்: துணை நிலை ஆளுநா் நடவடிக்கை

கேஜரிவால் கைதுக்கு எதிராக கையெப்ப இயக்கம் ஆம் ஆத்மி கட்சி தொடங்கியது

வடமேற்கு தில்லியில் தொழிற்சாலைகள் மேம்படுத்தப்படும் பாஜக வேட்பாளா் யோகேந்திர சந்தோலியா வாக்குறுதி

SCROLL FOR NEXT