வர்த்தகம்

ஸ்விஃப்ட், பலேனோ கார்களில் இலவச பழுது நீக்கம்: மாருதி சுஸுகி அறிவிப்பு

DIN

புதிய ஸ்விஃப்ட் மற்றும் பலேனோ கார்களில் பிரேக் அமைப்பில் பழுதிருந்தால் அதனை சரி செய்து தருவதாக மாருதி சுஸுகி நிறுவனம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து அந்நிறுவனம் தனது வலைதளத்தில் தெரிவித்துள்ளதாவது: 2017-ஆம் ஆண்டு டிசம்பர் 1 முதல் 2018-ஆம் ஆண்டு மார்ச் 16 வரையில் தயாரிக்கப்பட்ட ஸ்விஃப்ட் மற்றும் பலேனோ கார்களின் பிரேக் அமைப்புகளில் கோளாறு இருப்பதாக வாடிக்கையாளர்களிடமிருந்து புகார்கள் வந்துள்ளன.
இதையடுத்து, சிறப்பு முகமாம்களை அமைத்து, அப்பிரச்னையை சரி செய்து தர மாருதி சுஸுகி முடிவு செய்துள்ளது.
அதன்படி, நடப்பாண்டு பிப்ரவரியில் அறிமுகப்படுத்தப்பட்ட 44,982 புதிய ஸ்விஃப்ட் மற்றும் 7,704 பலேனோ என மொத்தம் 52,686 கார்களின் வாடிக்கையாளர்கள் இந்த சிறப்பு முகாம்களுக்கு வருகை தந்து அவர்களுடைய கார்களின் பிரேக் அமைப்புகளை பரிசோதித்து, பிரச்னைகள் இருந்தால் அதனை இலவசமாக சரி செய்து கொள்ளலாம் என மாருதி சுஸுகி தனது வலைதளத்தில் தெரிவித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘ஒரு வார்த்தை மாறிடுச்சு..’ : கங்கனாவின் பேச்சு குழப்பமான கதை!

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

காயம் காரணமாக தாயகம் திரும்பும் மதீஷா பதிரானா!

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு: பிரசாரம் ஓய்வு

ஆட்சிக்கு வந்தால் இஸ்லாமியர்களுக்கு 4 சதவீத இடஒதுக்கீடு: சந்திரபாபு நாயுடு உறுதி!

SCROLL FOR NEXT