வர்த்தகம்

அல்ட்ராடெக் சிமென்ட் லாபம் ரூ.375 கோடி

DIN


ஆதித்ய பிர்லா குழுமத்தைச் சேர்ந்த அல்ட்ரா டெக் சிமென்ட் நிறுவனத்தின் நிகர லாபம் இரண்டாவது காலாண்டில் ரூ.375.74 கோடியாக சரிவடைந்தது.
இதுகுறித்து அந்த நிறுவனம் மும்பை பங்குச் சந்தையிடம் தெரிவித்துள்ளதாவது:
நடப்பு நிதியாண்டின் ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான இரண்டாவது காலாண்டில் அல்ட்ரா டெக் நிறுவனத்தின் மொத்த வருவாய் ரூ.8,371.69 கோடியாக இருந்தது. இது, கடந்த நிதியாண்டின் இதே கால அளவில் ஈட்டிய வருவாய் ரூ.7,003.85 கோடியுடன் ஒப்பிடும்போது 19.52 சதவீதம் அதிகமாகும். செலவினம் ரூ.7,814.81 கோடியாக இருந்தது.
நிகர லாபம் ரூ.423.76 கோடியிலிருந்து சரிந்து ரூ.375.74 கோடியாகி உள்ளது. 
இரண்டாவது காலாண்டில் உள்நாட்டில் நிறுவனத்தின் சிமென்ட் விற்பனை அளவின் அடிப்படையில் 21 சதவீதம் அதிகரித்தது. இருப்பினும், எரிபொருள்கள் மற்றும் போக்குவரத்து செலவினம் கணிசமாக அதிகரித்ததையடுத்து நிறுவனத்தின் லாபம் 11.3 சதவீதம் அளவுக்கு சரிவை சந்தித்தது. 
ரூபாய் மதிப்பு சரிவின் விளைவால் செலவினம் கடந்தாண்டைக் காட்டிலும் 14 சதவீதம் அளவுக்கு உயர்ந்ததாக அல்ட்ரா டெக், பங்குச்
சந்தையிடம் தெரிவித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

12 ஆண்டுகளுக்குப் பின் மும்பையை வீழ்த்திய கொல்கத்தா: ஷாருக்கான் மகள் கூறியது என்ன தெரியுமா?

வெங்காய ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்!

ஜார்க்கண்டில் பிரதமர் மோடிக்கு அமோக வரவேற்பு!

மகாராஷ்டிரத்தில் விரைவில் வாக்குப்பதிவு: வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்

ஆந்திரத்தில் 227 மண்டலங்களில் வெப்ப அலை வீசும்!

SCROLL FOR NEXT